பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதத்தில் செழித்த வைணவம் 51 %. முரணாண இரு பிரிவுகளை பூரீவைஷ்ணவ வர லாற்றில் காணுகிறோம். ஒன்று, பிள்ளைலோகாச்சாரிய ரால் நிறுவப் பெற்ற தென்கலை வைஷ்ணவமாகும். மற்றொன்று. வேதாந்ததேசிகரால், நிறுவப் பெற்ற வடகலை வைஷ்ணமாகும். தென்கலைவைஷ்ணவத்துள், இறைவன அருள், நிபந்தனையற்றது என்றும் இயல் பாகவே எழுவது என்றும், (நிர்ஹேது கடாகவும்) வற் புறுத்தப் பெறுகிறது. வடகலை வைஷ்ணவத்துள் இது பக்தன், தனது பிரபக்தி யோகத்தால் அதாவது இறை வனது அருளும் பக்தனின் தகுதியும் சேர்ந்து சஹேது கடாகத்தால் ஏற்படுவது என்ற கூறப்பெறுகிறது. தென்கலை வைஷ்ணவமும் இறைவன்ே நம்முடைய முயற்சிகளாகவும் முடிபாகவும், (உபாயம், உபேயம்) ஒருங்கே விளங்குகின்றான் என்ற உண்மையினை ஒப்புக்கொள்கின்றன. கருமம், கிருபையால் நீங்குகிறது. "ஏது" என்கின்ற அளவையால் அல்லது காரணத்தால் கருமம் தீர்வதுஇல்லை.இறைவனோடு ஒன்றி உணர்கின்ற அனுபூதி நிலையே கருமத்தை நீக்குகிறது. கிறித்துவ, பூரீவைஷ்ணவ மீட்சிக் கருத்துகள், அறவாழ்வை வலியுறுத்தும் சமயங்கள் என்ற நிலையில், பாவம் என்பது இறைவனது ஆணையை மீறுவது என்னும் கொள்கையிலும், பாவம் மன்னிக்கப் பெறுவது, இறை வனது கருணை அதை மன்னித்துள்ளது, என்னும் கொள் கையிலும், இறைவனிடத்துக் கொள்ளுகின்ற நம்பிக் கையும் இறைவனுக்கு அர்ப்பணித்துப் பணிபுரிதலும் ஆகிய கொள்கைகளிலும் நெருங்கிய ஒற்றுமையுடையன. ஆனால், வைஷ்ணவக் கொள்கை யாவருக்கும் ஏற்புடைய ஒன்றாகும். கிறித்துவக்கொள்கையோ, இறைவனது ஒரே மகன், பழமையான பாவம், தீர்ப்பு நாள் என்னும் கொள்கையால் அதன் பொதுத்தன்மையை இழக்கின்றது. பூரீவைஷ்ணவத்துள் தண்டனையை அனுபவித்தல் என்பது மீட்சி அல்லது விடுவிப்பு என்பதனால் தொடரப்