பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 த கோவேந்தன் பெற்று மாற்றமடைவதைக் காணுகிறோம். கிறித்துவத்தில் முதலில் அமைவது மீட்சி அல்லது விடுவிப்பு நேர்கின்றது. இதன் பின்னர் அமைவது தீர்ப்பு நாள் ஆகும். தீர்ப்பு நாளில் பாவங்கட்கு ஏற்றதண்டனை விதிக்கப்பெறும். இங்குக் கோதுமையானது உமியினின்று நீக்கப் பெறுகின்ற ஒரு நிலையினைக் காணுகிறோம். பாவம் என்பது, பரீவைஷ்ணவன்த்துள் இறைவனிடமிருந்து பிரிதல் ஆகும். உண்மையான பாவநீக்கம் அன்பே வடிவ மாகிய இறைவனோடு ஒன்றுதல் ஆகும். இவ்வாறு இறைவ னோடு ஒன்றுதலாவது ஜீவர்கட்குப் பணி புரிதலிலே நாட்டம் கொள்வதும், அதன் அமர்ந்த தெய்வீக அன்பினாலே உந்தப்பெற்று ஜீவர்கட்குத் தொண்டு புரிவது மாகும். பக்தி நெறியில் உயர்ந்த இடத்தை, லீலை அல்லது அன்பினால் விளையும் விளையாட்டுப் பெறுகிறது. இவ்விளையாட்டில் இறை வன் தனது பக்தனோடு மறைந்தும், வெளிப்பட்டும், ஒடியும், ஒளிந்தும் விளையாடு கிறார்; இறுதியில் பக்த னோடு ஒன்றுகிறார். இவ்வுறவு நிலைத்ததாகும். அன்பில் விளையும் விளையாட்டு இரு நிலை களையுடையது.ஒன்று, இறைவனோடு கூடுவதால் எழும் உவகை உவகை அடுத்தடுத்துப் பரிவாகிய துன்பத்தால் தொடரப்பெறும்.இதனை ஆன்மாவின் இருள்மிகு இரவு என்று குறிப்பர். ஜீவன் நிலைத்த இன்பமாகிய முக்தியினை அடைகிறபோது லீலை முடிகிறது. முக்தி நால்வகைக் குறிக்கோள்களுள் முக்தி வேதாந்தத் தால் உயரிய தலை சிறந்த வாழ்க்கையின் குறிக்கோள் ஆகப் புகழப்பெறுகிறது. மற்றைய குறிக்கோள்கள்; தருமம் அல்லது அறநெறி நிற்றல், அருத்தம் அல்லது பொரு ளுடைவு, காமம் அல்லது இம்மை இன்பங்களையும்,