பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதத்தில் செழித்த வைணவம் 53 மறுமை இன்பங்களையும் நுகர்தல், மோக்ஷம் பிறப்பி னால் வருகின்ற துன்பங்களின்று விடுதலை பெறுவது; பக்தன் அறியாமையினின்று நீங்கிப் பிரம்ம இன்பத்தை முன்னரே சுவைக்கத் தலைப்படுகிறான். இம்மை வாழ் விலே இறை உண்மையினை அக உணர்வினாலே ஒரு சிறு பொழுதும் அறிய நேருகின்ற பொழுது இறவாப் பெறு நிலையின் மாட்சியினை அறிகிறான்.இம்மை வாழ்விலே, பிரமத்தை அறிய, அனுபவிக்க நேர்ந்தாலும், இவ்வனு பவம் நிலைத்தாகவோ, முழுமையுடையதாகவோ ஆகாது. பிரம்ம உலகிற்குச் செல்வதானாலே முக்தியை அடைகின்ற ஒருவன் இறவாத இன்பத்தை அறிவது என்று குறிக்கின்றனர். முக்தி, இவ்வுலகில் இம்மையில் அடைதல் கூடும். இதனை ஜீவன் முக்தி என்பர். பின்னர் அடை கின்ற முக்தியை விதேகமுக்தி என்பர். மற்றைய வேதாந் திகள் ஜீவன் முக்திக் கொள்கையை மறுக்கின்றனர். அவர்கள் முக்தி என்பது ஒரே நிலையென்றும், இம்மை வாழ்விலிருந்து விடுதலை அடைவது முக்தி ஆகாது என்றும், காலத்தாலும் இடத்தாலும் வரையறையுறுகின்ற விடுதலை பெறுவதே முக்தியாகும் என்றும் கருது கின்றனர். பிரமம் புதியதாக எவ்விதம் பயிற்சியாலும் (சாதனை களாலும்) அடையப்பெறுவது என்று அத்வை திகள் கூறுகிறபொழுது சிறந்த ஒழுகலாற்றிற்குஇடம் ஏது? சமய வாழ்வில் அடையதக்கது என்பதற்குப் பொரு ள்ளில்லை; மதிப்பும் இல்லை. இவ்வாறு, நேருகின்ற குறைகளை விசிஷ்டாத்வைதம் தவிர்க்கிறது.இருவகை உலகுகளைப் பிரித்துப் பேசுகிறது. ஒன்று, கால, இடை, வரையறை களால் கட்டுண்டு இருக்கும் இவ்வுலகு, இன்ப், துன்ப நுகர்வுகளை நல்குவது; மற்றொன்று.இவ்வுலகைக் கடந்து விளங்கும் பரமபதம் ஆகும். நிலைத்தப் பண்புகளாகிய உண்மை, நன்மை, அழகு, அருள் முதலியவைகளுக்கு உறைவிடமாகப் பரமபதம்