பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 த. கோவேந்தன் அமைகிறது. உடல் நீங்குகிறபொழுது முக்தியை அடைதற் குரியவன் வைகுந்தமாகிய இன்ப பூமியை அடைதற்கு நேரிய நெறியாகிய ஒளிமிக்க தேவயானத்தை விளக்கு கிறது. வைகுந்தத்தில் மாற்றம் இல்லாது இயற்கைக்கு அப்பாற்பட்ட நெறியிலே பொருள் ஒளிபெற்று விளங்கு கிறது. காலம், மாறாத என்றுமுள்ள ஒரு நிலையில் அங்கு உள்ளதாகின்றது. முக்தியை அடைந்தவன் கருமத்தால் கட்டுறாதவனாக எல்லை கடந்த ஞானத்தைப் பெறுகி றான். பிரபஞ்ச ஆட்சி அற்ற கடவுள் நிலையை அடை கின்றான். பிரமத்தை உட்னாக அறிகின்ற அறிவு, முக்தி நிலை அடைந்தவனுக்கு வாய்க்கிறது. அவன் பிரமத்தோடு ஒன்றிப் பேரின்பத்தை நுகர்கிறான். பன்மை உலகு தொடர்ந்து இருப்பினும் முக்தி நிலை அடைந்தவனுக்குப் பன்மைக் காட்சி நீங்குகிறது. ஆன்மாவுக்கும், பிரமனுக் கும் உள்ள வேறுபாடு என்றுமிருப்பது. ஆனால், ஆன்மா முக்தி நிலையில்தான் பிரமத்தினின்று பிரிவுற்று இருப்ப தென்னும் உணர்வு மறைகின்றது. ஆன்மா, தனது தனித் தன்மையை இழப்பதில்லை. இறைவனோடு ஒத்து உழைக்கின்ற நிலையில் முக்தி நிலைபெற்ற ஆன்மா, பணிபுரிவதாகக் கொள்ளுதல் தவறு. ஆனால், ஆன்மா "நான்,நான் அல்ல, ஆனால்cஎன்னுள்ளே அமைகிறாய்.” என்ற உணர்வுகளைப் பெற்று அகந்தையை நீக்கி விடுகின்றது. வளந்தோங்கிய வைணவம் விசிஷ்டாத்வைதம், சமயம் குறித்த மெய்ப்பொருளி யல் ஆகும். சமய வாழ்வில் இடம்பெறும் அனைத்து நிலை களையும், ஒருங்கே தொகையாக ஒன்றுபடுத்திப் பிரம ஞானத்தில் தெளிகின்றது. அதே சமயத்தில் ஆன்மா பிர மத்தோடு ஒன்றுதலாகிய ஒரு உணர்வினையும் நாடுகிறது. அனைத்துயிர்க்கும் பிரமம் ஆதாரமாகும். ஆன்மாக்கள்