பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம்

57

தழைக்கும்படி வகுத்தனர். இராமானுஜரைப் பின்பற்றிய இராமானந்தர் என்பார் வடக்கே சென்று வைஷ்ணவன இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். பஞ்சாப் நாட்டிலும், வங்கத்திலும் தோன்றிய வைஷ்ணவன இயக்கங்கள் இராமானந்தரால் ஊக்குவிக்கப் பெற்றனவாகும்.

அருளாட்சியை (இராம ராஜ்யம்) இந்நிலவுலகத்தில் நிலைபெறச் செய்தவர் இராமானந்தர் ஆவார். மன்னன் ஆட்சி, ஒரே மனைவியை மணத்தல், ஒரு கடவுட் கொள்கை ஆகிய மூன்று உண்மைகளை அரசியல், சமூகம், சமயம் ஆகிய துறைகளில் முறையே வற்புறுத்தினார். மகாத்மா காந்தியின் முன்தோன்றல் இராமானந்தர் ஆவார்.

இராமானந்தரைப் பின்பற்றியோருள் பலராலும் அறியப் பெற்றோர். கபீர், தாது, துளசிதாஸ் ஆகியோர், ஆவர். இவர்களுள் கபீர் கி.பி.1398-இல் பிறந்தவர்.ஹிந்து, முஸ்லீம் ஐக்கியத்திற்காகச் செயலாலும், நடத்தையாலும் பெருந்தொண்டு புரிந்தவர்.வேதாந்ததிற்கும், இஸ்லாமிய அனுபூதி நெறியாகிய சூபி முறைக்கும் உள்ள பொது உண்மைகளை வற்புறுத்தினார். கம்ப இராமாயணத்தைத் தமிழிலே விருத்தப்பாக்களில் அமைத்துப் பெரும்புகழ் பெற்றதைப்போல், இராமாயணத்தை இந்தி மொழியில் மொழிபெயர்த்து, துளசிதாஸ் இறவாத புகழ்பெற்றார்.

தாது (1544 - 1603) என்பவர் அக்பரைப் பன்முறை நேரில் கண்டு இஸ்லாமியத்தையும், ஹிந்து மதத்தையும் ஒன்றுபடுத்த முயன்றார். வல்லபரது சுத்தாத்வைதம், ஶ்ரீ வைஷ்ணவத்தின் அனுபூதி நெறியோடு பல ஒற்றுமைகள் கொண்டு உள்ளது. இராதா கிருஷ்ணரிடத்துப் பெருகும் பேரன்பு புஷ்டி பக்தியாகும்; நம்மாழ்வார், ஆண்டாள் ஆகியோரின் நாயக நாயகி அன்பு நெறியினை ஒத்ததாகும். வங்கத்தில் வளர்ந்த வைஷ்ணயவம் ஶ்ரீசைதன்ய ரால் தோற்றுவிக்கப் பெற்று, அசிந்தியாபேதா பேதம் என வழங்கியது.