பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகன் தந்தைக்காற்றும் உதவி...

   வைணவம் உலகம் தமிழுக்கு தந்த அருட் கொடைகள் ஏராளம். தமிழ் மொழிவளத்தில்

எண்ணிலடங்கா சொற்பெருக்கினை அள்ளி அள்ளி வழங்கியது வைணவ இலக்கியங்கள்.

   வைணவம், இறை உணர்வில் இந்தியா முழுதும் உள்ள மக்களை ஒன்றிணைத்தது; வளப்படுத்தியது; செழுமைக்கு வித்திட்டது எனலாம்.
    இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளுக்கும் மூத்த மொழிகளான சமஸ்கிருதத்திலும், தமிழிலும் வைணவ சமயத்தின் இலக்கியங்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து வளர்ந்தன; செழித்தன, அதன்விளைவாய் சமஸ்கிருதத்திலிருந்து விஞ்ஞானம்,வேதங்கள், சாஸ்திரங்கள்,சித்தாந்தங்கள் தமிழில் உருவாகி தமிழுலகுக்கு, தமிழ் மக்களுக்கு அரும்பெரும் காவியங்கள், நாடகங்கள் கிடைத்தன.
    தமிழ்மக்களின் உள்ளத்தில் இறை உணர்வை, தமிழ் உணர்வை போதித்து மனத்தளவில் மனிதனை செழுமை படுத்தின. இதனின் வெளிப்பாடாய் பாரதி தமது வாக்காக, போதமாக”ஆன்ற மொழியினுள்ளேஉயர் ஆரியத்துக்குநிகரென வாழ்ந்தேன்” என்று பாடுகிறார்.
   வைணவ நெறியல் இராமானுஜர் காலத்துக்குப் பின் அது புதுவடிவமும், புதிய உத்வேகமும் பெற்றது. இராமனுஜரது விசிஷ்டாத்வைதம் மனிதர்களிடத்தில் அன்பு நெறியையும், ஒருமைப்பாட்டையும் இணைத்து இறை உண்மையை வெளிப்படுத்தியது.
  இராமனுஜர் காலத்துப் பிறகு தழிகத்தில் வைணவம் இரு வேறு கருத்துமுறைகளை கொண்டிருந்தாலும். இருமையில் ஒருமையை கொண்டாடியது அதுமட்டுமல்லாது அவருக்குப் பின் தோன்றிய இராமனந்தர் இநதியாவின் வடக்கே வைணவத்தை பரப்பி பஞ்சாப், வங்கம் முதலிய பகுதிகளில் ஒரு இயக்கமாக உருவெடுத்தார்.