பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாத்வரின் பிரம்ம

மெய்பொருளியல்




மாத்வர் விளக்கிய பிரம மெய்ப்பொருள் இயல் (பிரம மீமாம்சை) பலராலும் துவைதம் என வழங்கப்பெறுகிறது. உடுப்பி என்னும் ஊருக்கு அருகே, கி.பி. 1138-இல் தோன்றினார். மாத்வரது மெய்ப்பொருள் இயலில் காணப்பெறும் பொதுவான தத்துவங்கள் அவரது சமுதாயச் சூழ்நிலையை உருவாக்கின. புலமையாளர்கள் மாத்வ மெய்ப்பொருளியலை விருப்பத்தோடு பயின்றனர். மாத்வ மெய்பொருள் இயலைக் குறித்து நிலவிய சில கருத்துகள் சிலரிடத்து அதிருப்தியை விளைவித்தன.
மாத்வரது நூல்கள் ஒருமை நோக்கைப் புலப்படுத்துகின்றன. இவர் நூல்களை மூன்று தலைப்புகளிலே நாம் கருதலாம். ஒன்று, அறிவு ஆராய்ச்சி இயலில் காணப்பெறும் தத்துவங்களும், உள்பொருள் பற்றிய தத்துவங்களும் பிரம மெய்ப்பொருளியலுக்கு வழிவகுக்கும் இவற்றின் திறன் ஆய்வுமாகும். இரண்டாவது, பிரம மெய்ப்பொருள் பற்றிய விளக்கம், மூன்றாவது, பிரம மெய்ப் பொருளியலைப் பயன்படுத்துதல்.

பிரம மெய்ப்பொருள் இயலும் திறன் ஆய்வும்

சரியான அறிவும், (பிரமா) இவ்வறிவுபெறும் வாயிலும் (பிரமாணம்) ஆகிய இரண்டும் பொருளை