பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

த கோவேந்தன்

அப்பொருள் உள்ளவாறே அறிவனவாகும் என்று மாத்வர் கூறுகிறார். அறிவும் அவ்வறிவின் ஆதாரமும் அவ்வவற்றிற்கு உரிய பொருளை உள்ளவாறு அறிகின்றன. இக் கருத்தை மறுத்தவர் எந்த அறிவும் பெறுதல் இயலாது. அறியப்படும் பொருள் இன்றி, அறிவும் இல்லை. எப்பொருளும் அறியப் பெறாதது அன்று. ஒவ்வொரு பொருளும் மற்றொரு பொருளை குறிக்கும் முறையில் ஒரு கூறாக அமைகின்றது.
அறிவு, ஒரு பொருளும் அற்றது என்று கொள்வது அதை அடிப்படையில் ஒன்றுமற்றதாகச் செய்வதாகும். அறியப்படும் பொருள், அறிவின் மீது புகுத்திக் காணப் பெறுகிறது. என்று கருதுவது அறியப்படும் பொருளினை உள்ளதாக ஏற்பதாகும். அறியப்படும் பொருள் இன்றி எவ்வாறு அதன் மீது மற்றொன்றினைப் புகுத்திக் காண முடியும். உண்மையான, வெள்ளியினை அறியாது எவ்வாறு வெள்ளியினை இப்பியில் மீது வைத்துக் திரிபுக் காட்சியில் இப்பி வெள்ளியாகக் காணப்பெறுகிறது. வெள்ளியை அறிந்தாலன்றி, இப்பியில் வெள்ளியைக் காண இயலாது. வெள்ளி காணப்பெறுவதற்கு வெள்ளியைப் பற்றிய அறிவு தேவை. அறிவை, அறியப்படும் பொருளினின்று பிரித்து அறிதல் பல பிழைபடுகின்ற கொள்கைகட்குக் காரணமாகும்.
ஒரு சார்பு கொண்ட கருத்து முதற்கொள்கை, கருத்தையே வற்புறுத்துவதும் என்ற புறநிலைக் கொள்கை (Objectivism)புற உலகின் உண்மையினையே வற்புறுத்துவதும் அப்பிழைகளைச் சேர்த்தன. ஆதலால் பொருளை அறிவினின்றும், அறிவைப் பொருளினின்றும் பிரித்தல் ஆகாது.
பிழையான அறிவு, பொருளினை உள்ளவாறு அறியாது அதன் இருப்புக்கு மாறான முறையில் அறிவதாகும். இவ்வாறு அறிவது அறிவு ஆகாது. அறிவு