பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம்

61

பிழைபடுவதற்குக் காரணம், அறிவு தோன்றுகின்ற வகையிலே, குறைகள் நேர்வதாகும். அறிவு, அல்லது உண்மையாக அறிதல் என்பது பிழைப்படும் அறிவினின்று தனித்து, அயலாக நிகழ்வதாகும். பிழைபடும் அறிவு என்பது சரியான அறிவு ஒன்று உண்டு என முன்பே அறிந்திருப்பதைக் குறிப்பதாகும்.

இப்பியை வெள்ளியெனத் தவறாக அறிதல் பளபள என ஒளிர்கின்ற ஒன்றை முன்பே சரியாக அறிந்திருப்பதை உணர்த்தும். உண்மையான அறிவு, அறிவுநிலையிலும், அவ்வறிவை ஆக்கும் நிலையிலும், ஒரு இயைபினைக் காண்பதாகும். எனினும், அளக்கும் கருவியின்றி, அறிவு தன்னிலையிலேயே விளக்கமுடையதாக உண்மையாகவே வெளிப்படுகிறது. ஒர் அறிவின் உண்மை, தானே புலப்படுவதாகும். ஐயம் எழுகின்றபோது, இயைபு ஒர் அளவு கருவியாக இருந்து, அறிவின் தகுதியினைத் தேருதற்குத் துணை செய்கிறது. பிழைபடும் அறிவிலே, இயைபு இன்மையைக் காணுகிறோம். பிழையான நிலை இயைபின்மையால் ஊகித்து அறியப் பெறுகிறது.
ஓர் அறிவின் உண்மை நிலையினை அவ்வறிவின் பிறப்பிடத்தின் தகுதியினைக் கொண்டு ஊசித்தறியலாம் என்று சொல்வது பொருந்தாது. உண்மை அல்லது பிரமாண்யம் என்னும் அறிவின் உயிர்நிலையை அதற்கு அயலான காரணங்களைச் சார்ந்து இருப்பதாக, இது செய்கின்றது. அறிவு, முக்கியமாகவே உண்மை அற்றது எனின் அறிவுக்குப் பொருள் இல்லை என்ற நிலை ஏற்படும். பொருள் இல்லாதபோது விளக்கம் காண்பதற்கு ஏதும் இல்லை. அறிவு அயலான புறக்காரணங்களைச் சார்ந்தது என்பதும் ஏற்படும்.
அறிவு ஒரு பொருளை உள்ளவாறு உணர்கிறது. ஆன்மா, சாக்ஷியாக அமைய அறியப்பெறும் பொருள் நன்கு விளங்குகிறது. ஒவ்வொருவனுக்கும் இச்சாக்ஷி