பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

{rh|66||த கோவேந்தன்}}

உறுகின்றது.இம்மாற்றம், சாக்ஷி நிலைக்கு அயலானதன்று. சாக்ஷி பொருளை உள்ளவாறு குணங்களோடு அறிகின்றது. ஆதலால், சாக்ஷி எவ்வகை வரையறையும் இல்லாமல் இருப்பது என்று கருதுவது தவறாகும். சிந்தனையினாலும், தியானத்தாலும், வரையறையில்லாத அறிவு பெறுதல் கூடும் என்பது பொருந்தாது. மனமும், சாக்ஷியும், சிந்தனைக்கும், தியானத்திற்கும் தத்தம் பங்கினைச் செலுத்தி அறியச் செய்கின்றன என்பதை மறுக்க இயலாது. வரையறையில்லாத அறிவு என்பது அறிவின் இயல்போடு முரண்படுவதாகும். வரையறையில்லாத அறிவேயில்லை.

வரையறையில்லாத அறிவு ஒரு பொருளின் தன்மையோடும் முரண்படுவதாகும். ஒவ்வொரு பொருளும், வெவ்வேறு கூறுகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் ஒருமுறை அமைப்பாகும். இப்பொருள் பல பொருள்கள் இயைந்த ஒர் அமைப்பில் இடம் பெறுகின்றது. இது வேறுபாடுகள் ஒன்றுபடும் ஒர் ஒருமையுமாகும். இவ்வாறு அமையும் அமைப்பில் தனித்ததொருபொருள் ஓர் உறுப்பு எனினும் ஒருமைப்பாட்டுள் அது ஒரு வேறுபாடாகும். தனித்ததொரு பொருள் அல்லது அப்பொருளின் கூறு, அது இடம்பெறும் முறைமைப்பினின்று பிரிப்புறுதல் வேண்டாத ஒன்றாகும். இவ்வாறு பிரிந்து அறிதல் இன்றி வரையறையில்லாத அறிவு தோன்றாது.

2

ஆகம நூல்கள் மாத்வரால் சிறப்பாகக் கருதப்பெறுகின்றன. அவை ஆட்சி செலுத்துவனவாகவோ, ஆணைகளைப் பிறப்பிப்பனவாகவோ கருதப்பெறவில்லை. ஆட்சி செலுத்துதலும், ஆணை பிறப்பித்தலும் அறிவின் வளர்ச்சியைத் தடை செய்வன. ஆகம நூல்கள் சில செயல் முறைகளை வரையறுக்கின்றன. ஆன்மீகக் கருத்துகள் பொருந்திய நூல், அறிவு பெறுதற்கு ஓர் இன்றியமையாத வாயிலாகும்.