பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதத்தில் செழித்த வைணவம் 67 உரையளவை என்பதை மாத்வர் கருதுகிறபொழுது முக்கியமாக வேதங்களையும், உபநிடதங்களையும் கருதுகிறார். அறிதல் என்னும் முறைமையில் காட்சி, கருதல், உரை ஆகிய இம்மூன்றும் மூவேறு நிலைகளா யினும், ஒருமைப்பாடுடையனவாய் அமைகின்றன என்பது மாத்வர் சுட்டுகிறார். உள்பொருளைப் பற்றிய அறிவு, அனைத்தையும் உட்படுத்துவது; தன் விளக்கத்தோடு கூடியது. இவ்வுண்மையினை வேத நூல்களினின்று அறியலாம் என்று அவர் கருதுகிறார். வேதம் உள்பொருளைப் பற்றிய அறிவைத் தருவது என்று உணர்வது வேதத்தின் இன்றியமையாமையை உணர்வதாகும். உண்மை அறிவிற்கு வேதம் தவிர்க்க வொனதாத துணையாகும். காட்சி, கருதல், உரை ஆகிய அளவைகள் உள்பொருளைப் பற்றிய அறிவைத் தரினும் அது பகுதியான அறிவேயாகும். முழு அறிவு ஆகாது. இவ்வளவைகள் வேகத்தோடு தொழிற்படுகின்றபோது உள்பொருள் முழுமையும் அறிகிறது. வேதம் அறிவின் மொழியாக அமைகிறது. வேதம், உள்பொருள் முழுமையும் கருத்திலே வைத்துள்ளது. வேதப் பகுதிகள் மாறுபடுகின்ற உண்மைகளை உரைப்பனபோல் தோன்றுவதற்குக் காரணம் மனத்தின் சிதறுகின்ற நிலையாகும். மனத்தின் சிதைவு உள்பொரு ளின் சில கூறுகளால் ஈர்க்கப்பெறுதல் ஆகும். வேதத்தில் உள்ள ஒருமை நோக்கினைப் பாராட்டுதல் என்பது, அறிவு அமையும் வாயில்கள் அனைத்தும், ஒருமை நோக் குடையன என்பதை உணர்தல் ஆகும். வாழ்வின் பல கூறுகளும் ஒரே நோக்குடையனவே. அனைத்து அறிவு வாயில்களும் ஒரே நோக்குடையன என்பதை உணர்கிற பொழுது வேதத்தின் குறித்த சில பகுதிகளைப் பெரிதும் வற்புறுத்துதலோ மற்றவற்றினின்றும் பிரித்து உணர்தலோ நேராது.