பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



  இராமானந்தரைத் தொடர்ந்து கபீர், தாது, துளசிதாஸ், ஸ்ரீசைதன்யர், ஞானதேவர், நாமதேவர் ஆகியோர் வைணவ நெறியை அவரவர் சித்தத்துக்கு ஏற்ப செழுமைப் படுத்தி இந்தியாவின் சமயவளர்ச்சிக்கும், மெய்ப் பொருளியில் வளர்ச்சிக்கும் மனிதனின் உள்ளுணர்வினை செழுமைப் படுத்தி உண்மை, அன்பு, மனிதநேயம், அழகு ஆகியநிலைத்தப் பண்புகளின் நிலைக்களனாய் நின்று பெருந் தொண்டாற்றினர்.
  இதற்குகெல்லாம் மூலகாரணமான வடமொழியில் அதாவது சமஸ்கிருதத்தில் உருவான வேதம் மனிதனின் அறிவு சிறப்பினை செழுமைப்படுத்தி இறைவன் மனிதனுள் ஒருவனாகவும்,மனிதனே இறைவனாகவும் இரண்டரக் கலந்து உலகில் அன்பு, அறறெறியை போதித்தது. இதனாலேயே சமஸ்கிருத்ததை"வேதம் நன்றாக செய்யப்பெற்ற முழுமையான மொழி” என்று கூறுகின்றனர். இத்தகைய செழுமை பெற்ற வைணவத்தை தமக்கே உரிய நடையில் ஆய்ந்துள்ளார் என்.தந்தையார் புலவர் கோவேந்தன்.
  இராமனுஜரை தொடர்ந்து சமய இலக்கியத்தில், வைணவ நெறியில் இறையைத்தேடிய சான்றோர்களின் இலக்கியப் பணியை, மக்கள் பணியை மேற்கொண்ட இந்திய சமய பெரியோர்களின் கருத்தியலை, இறை நெறியியலே ஆய்வு நோக்குடன் விவரித்துள்ளார். *
  தம் இறுதிக் காலத்தில், மருத்துவமனையில் சேரும் முன்பு இந்நூலை எழுதி முடித்து அச்சுக்கு தயார் நிலையில் வைத்திருந்த தந்தை நூல் வடிவம் பார்க்காமலே காலமானார்.

வைணவ நெறி என்பது தமிழக மக்களுக்கு மட்டும் உரியது அல்ல. அது இந்தியாவும் ஏன் உலகுக்கும் அதனை ஒழுகும் மக்களுக்கும் வழிகாட்டும் நெறி என்பதை இந்நூல் விவரிக்கிறது. -

 இதனை வெளியிட முன்வந்த விக்னேஷ் வெளியீடு பதிப்பகத்தார் வேலாயுதம் அவர்கட்கு தமிழ் கூறும் வைணவ உலகம் பாராட்டும், போற்றும்.
                          
                        
                   அஅன்புடன்்
                  கோ.எழில்முத்து