பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 த கோவேந்தன் யாவற்றையும் தெளிவுற ஆராய்கிறார். இவ்வாறு, ஆராய்ந்து மாத்வர் தனது கருத்துக்கு மாறுபடும் கருத்துகள் தம்முள் முரண்படுவன என்று காட்டுகிறார். எடுத்துக்காட்டு: “கருமநெறியே விடுதலைக்குரிய வழி, அல்லது பக்தி நெறியே விடுதலைக்குரிய வழி” என்று சொல்வதில் உள்ள குறைகளைப் புலப்படுத்துகிறார். செயல்நிலை, ஞானம் இன்றி நிகழாது. ஞானத்தின் இயங்குநிலையாகச் செயல் நிலையைக் கொள்ள வேண்டுவதாகின்றது. பக்தியின் கூறாக நம்பிக்கை அமைகிறது. ஞான நெறியிலே ஒருவன் கொள்ளுகின்ற பக்தியின் ஒரு கூறாக நம்பிக்கை அமைகிறது. ஆதலால் ஞானத்தின் செறிவை விளக்குவது எனப் பக்தியைக் கொள்ளலாம். செயல் நிலையை ஞானத்தினின்று பிரிப்பது தவறு. ஏனெனில் செயற்குரிய நிலையினை முன்னதாகவே ஒருவனிடத்து நாம் இருப்பதாகக் கொள்வதாகும். இது பிரமம் யாவற்றையும் நிகழ்த்துவோன் என்னும் உண்மையினை மறுப்பதில் முடியும். தனி நிகழ்த்துவோன் என்னும் உண்மையினை மறுப்பதில் முடியும். தனி ஒருவன் செயல்களை மேற்கொள்ளத்தக்கவன் என்று கருதுவது பிரமம் யாவற் றையும் இயக்குவோன் என்பதை மறுப்பதாகும். ஞானத்தி னின்று நம்பிக்கையினை அல்லது பக்தியினை நீக்குவதானது ஆன்மீகம் அல்லாத ஒரு நிலையினை மேற் கொள்வதாகும். ஈசாவாஸ்ய உபநிடத்தில் அரைகுறை ஞானம் அவித்தையாகும். முழுமையான ஞானம் முற்றுணர் வாகும், வித்தையாகும் என்று கூறப்பெறுகிறது. மயக்க நிலைகளை, மயக்க நிலைகள் என உணராது போனால் ஞானத்தை உள்ளவாறு உணர்ந்து பாராட்ட இயலாது. அரைகுறை அறிவினை நாம் போற்றினால் ஞானத்தின் முழுமையான நிலையினை மறந்தவர்கள் ஆவோம்.