பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதத்தில் செழித்த வைணவம் 75 பெறுகின்றன. உண்மையான ஞானம் பெறுகின்ற வகையில் பக்தியும் கருமமும் பெரி தும் துணை புரிகின்றன. இவ்வுண்மையினை ஒருவன் நன்கு உணர் வானேயானால் தேக முழுமையும் ஊடுருவிச் செல்லும், ஒருமை நோக்கு நன்கு புலப்படும். 3 மTத்வர் பீரம மெய்பொருளியலுக்கு எதிராக வேதத்தினை வற்புறுத்துவது எப்பயனையும் விளைக்காது என்று கூறுகிறார். சங்கரர், இராமானுஜர் ஆகியோர் பிரமம் குறித்துக் கொண்ட கொள்கைகள் இவ்வுண் மையினை விளக்குகின்றன. சங்கரர், பிரமத்தை நிர்வி வேஷம் அல்லது நிர்க்குண பிரமம் என்று குறித்தார். இராமானுஜர் பிரமம் இவ்வுலகின் உயிர் என அல்லது சரீரி எனக் குறிக்கிறார்.இராமானுஜர், சங்கரர் ஆகியோர் கொண்ட கொள்கைகள் வேதத்தில் காணப்பெறும் தனித்த கருத்துரைகளின் சொற்பொருளை அடிப்படை யாகக் கொண்டவை. ஆதலால் இவை இருமைக் கொள்கைகளை விளக்குவனவாக அமைகின்றன. உட்பொருள் வேறு, சொற்பொருள் வேறு. இவை விளக்கம் தருவதைவிடப் பல சிக்கல்களை எழுப்புவ தாகும். குணங்கள் அற்றது என்று நிறுவுவது தன்னைத் தான் மறுப்பதாகும். அவித்தை இருமையை விளக்காது. பிரமம் குணங்கள் அற்றது எனின் அறியாமைக்கு ஆதார மாகாது. அப்பொழுது அறியாமை ஆதாரமற்றதாகி விடும். அறியாமையும், குணங்கள் அற்ற பிரமமும் ஒரு மித்து இருத்தல் இயலாது. அறியாமையை வற்புறுத்துவது அதற்கு ஒரு சிறப்புத் தருவதாகும். அறியாமையைத் தனித்த தொரு பொருளாக்கிப் பிரமத்திற்கு எதிராக அமைப் பதாகும். * இருமைக் கொள்கையில் பிரமம் அடங்குகிறது. உலகாகவும், உயிர்த்தொகுதியாகவும் விளங்குவது