பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 த கோவேந்தன் பிரமத்தின் சரீரமாகும். பிரமம் உலகு, உயில் ஆகிய இருமையிலே அடங்குவதாகும். இந்த இருமை, பொருள் குணம் ஆகிய இருமையாகும். பொருளையும் குணத்தையும் இணைக்கும் ஒவ்வொரு கருத்தும் இருமையை வற்புறுத்து வதாகும். வேதக் கருத்துகளை விளக்கிக் கூறுவதற்குப் பிரம மெய்ப்பொருளைப் பயன்படுத்ததுவது முற்றிலும் புதிய வேறான பிரமத்தைப் பற்றிய கருத்தை விளைவிக்கக் காண்கிறோம். இதனை மாத்வர் அறிகிறார். இந்நிலை யினை விளக்குகிறபோது வேதாந்தக் கருத்தின் முடிந்த நிலைக்குக் கொணர்கிறார். பிரமத்தைப் பற்றிய கருத்து எப்பொழுது அமையும். மெய்ப்பொருளியலை வேதப் பகுதிகளைப் புரிந்து கொள்வதற்குப் பயன்படுத்துகிற போது பிரமத்தைப் பற்றிய கருத்து தோன்றுகிறது. ஆதலால், பிரமத்தைப் பற்றிய கருத்து வேதத்தைச் சார்ந்தது ஆகும். குணங்கள் அற்று இருத்தலும், வேதமாக இருத்தலும் முரண்படுவனவாகும். பிரமம் உடலைக் கொண்டுள்ளது என்று கருதுவது அனுபவ நிலையில் காணும் வேறுபாடுகள் அனைத்தையும் பிரமம் கடந்த விளங்குகிறார் என்று வேதம் நன்கு விளக்குகிறது. வேதத்தை ஒர் அறிவு வாயிலாகக் கொள்வது ஏனைய அறிவு வாயில்களை எல்லாம் வேதம் கடந்து விளங்குகிறது என்று கொள்வதாகும். வேதம், மற்றைய அறிவு பெறுகின்ற வாயில்களை மறுப்பதன்று. மற்றை வாயில்கட்கு வேதம் சிறப்பினைத் தருகிறது. எடுத்துக் காட்டாக காட்சி, புறப்பொருளைப் புலப்படுத்துவது என்று பொதுவாக அறியப்பெறுகிறது. புறப்பொருள் பிரமத்தின் வெளிப்பாடு என்று வேதம் உண்மைத்தத்துவ நிலையில் விளக்குகின்ற ஆற்றலால் பிரமம் புறப்பொருள் கட்கு ஆதாரம் என்பதை வேதம் காட்டும். காட்சியோ, பிறவோ, வேதத்திற்கு அயலாக இல்லை. இந்நிலையில் பிரமத்தைப் பொதுப் பொருள்கள் இடத்திலே வைத்து