பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதத்தில் செழித்த வைணவம் 77 வேதம் உணர்த்துகிறது. இவ்வாறு உணர்தலிலே புறப் பொருள் பற்றிய அறிவு பிரம ஞானத்தில் ஒன்றுகிறது. பிரமம் அனைத்துப் பொருள்கட்கும் ஆதாரமாகும். பொருள் பிரமத்தில் அல்லது தனது அடிப்படையில் ஒன்றுகிறது. வேதம், மற்றைய அறிவு வாயில்களைக் கடந்து விளங்குகிறது என்று சொன்னால் மற்றையவைகளை உட்படுத்தியே விளங்குகிறது என்று பொருள். இதே போலப் பிரமம் அனைத்துப் பொருள்களையும் கடந்து விளங்குகிறபோது, எப்பொருளையும் விலக்குவது இல்லை. ஆதலால், அறிவு பெறுதற்கு உரிய வாயிலாகத் திகழ்கின்ற எந்த வாயிலும் வேதத்தால் தெளிவு பெறாத நிலையில் இல்லை. இதேபோலப் பிரமத்திற்கு அயலாக எப்பொருளும் இல்லை. பிற வாயில்களின் மூலம் நாம் பெறுகின்ற அறிவிற்கு வேதம் பிறப்பிடமாகும். சாந்தோக் கியம் ஒரு மெய்ப்பொருள் இயல் நிலையில் நின்று முடிவிவுக்கு வந்துள்ளது. சாந்தோக்கிய மெய்ப்பொருள் இயலின் முடிவு வருமாறு: 'பிரமத்திற்கு இரண்டாவது நிலையில் யாரும் இல்லை'. தனக்குவவ்ையில்லாதான் பிரமன், ஒன்றே எனக் கூறுகின்றவர் உலகின் உண்மையல் லாத நிலையினை உணர்கிறார். பிரமமும், உலகும் ஒன்றேயெனக் க்ொள்கின்றவர் உலகினை இறைவனது உடலாகக் காண்கின்றனர்.வேதத்தின் சொற்பொருளைக் கொண்டு வேதம் பல பொது உண்மைகளையுடையது என்று கூறுவது பொருந்தாது. இவ்வுலகு உண்மையற்ற எனக் கருதுவது இவ்வுலகு உண்மையுடையதா அல்லது அற்றதா என்று கருதுவதன் அருமையை உணர்த்துவதாகும்.இவ்வுலகினை பிரமத்தின் உடல் எனக் கூறுவது. பிரமத்தைப் புறப்பொருள் ஒன்றினால் கட்டுறச் செய்வதாகும். இம்முடிவுகள் பிரமமெய்ப்பொருள் இயலை எதிர்க்கத் தக்கன அல்ல. உலகு உண்மைப்பொருள் அன்று என்று கூறுவதோ, உலகு