பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 த. கோவேந்தன் பொய்ப்பொருளும் அன்று என்று கூறுவதோ இவ் விருவகை முடிவுகளைக் கூறுவது வேதத்தின் உண்மை நிலை அன்று. வேதத்தின் நிலையாவது பிரமம் இணையற்றது என்று கூறுவது, பிரமத்தின் மெய்ப்பொருளியலால் ஏற்படும் உண்மையாகும். இதனின்று நாம் பெறுவது உலகம் உண்மையே, இவ்வுண்மையினை ஏற்கின்ற பொழுது இவ்வுலகின் உண்மை ஆதாரத்தைக் காணு கின்ற சிக்கல் ஏற்படுகிறது. வேதம், உலகு உண்மையினை நிறுவிய நிலை,பிரமத்தின் மெய்ப்பொருளியலைஇன்றிய மையாத தாக்குகின்றது. 4 பிரம மெய்ப்பொருளியல் ஆய்வின் மூலமாகப் பிரமத்தின் உண்மை அறியப்பெறுதல் வேண்டும். இவ்வாறு பிரம மெய்ப்பொருளியலின் பயிற்சியின் மூலம் பிரம உண்மையினைத் தெளிதல் வேதத்தில் முக்கிய கொள்கையாகக் காணப்பெறுகிறது. வேதத் தொடர்கள் மேற்குறித்த கருத்தினை விளக்கும். 'பிரமத்தைப் பற்றி ஆராய்க, 'பக்தியோடு பிரமத்தைப் பற்றி ஆராய்க” இவ்விரு தொடர்களும் இவை போன்ற பிறவும் மெய்ப்பொருள் ஆராய்ச்சி இயலின் மூலம் பிரமத்தின் உண்மை அறியப்பெறல் வேண்டும். என்பதை வலியுறுத்தும். “பிருகதாரண்யக உபநிடதத்தில் பிரமத்தைப் பற்றிய மெய்ப்பொருளியல் வரையறை செய்யப்பெறுகிறது. “ஆன்மா, உணரப்பெறு வேண்டுமானால், ஆன்மா அறியப்பெறல் வேண்டும், பயிலப்பெறல் வேண்டும். பயின்று, தெளியப் பெறல் வேண்டும்.” பிரம சூத்திரம் “பிருகதாரண்யக உபநிடதத்தில் ஆடங்கிஇருக்கும் கருத்து ரைகளால் குறிக்கப்பெறும் பொருளை வெளிப் படுத்துகிறது.