பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதத்தில் செழித்த வைணவம் 81 வாசுதேவனாக அனைத்தையும் உள்ளடக்கியோனாக அறிந்து கொள்ளுதலை விளக்குகிறது. பிரமம் அனைத்தையும் உள்ளடக்குகின்ற பரம் பொருளாகும். இதனை உணர்ந்து பாதராயணர் நாராயணனை அல்லது வாசுதேவனை விஷ்ணு என, வேதம் போற்றுவதாக விளக்குகிறார். பிரமம் தன்னை விஷ்ணு என, உணர்ந்து கொள்ளுகின்ற முறையே, பிரம மெய்ப்பொருள் இயலாகும். இவ்வாறு உணர்தலாகிய முறையே படைப்புத்திறனாக நிகழக் காண்கிறோம். மெய்ப்பொருளியலுக்கு அயலாக ஏதும் இல்லை என்று தெரிய வருகிறது. இதனை உணர்த்தவே மாத்வர் மெய்ப்பொருளியலை விஷ்ணுவைக் குறித்த விஞ்ஞானம் என்று கூறுகிறார். விஷ்ணுவைப் பற்றிய விஞ்ஞானம் மிகுந்த விரிவுடையது. அனைத்து விஞ்ஞானங்களின் பிறப்பிடமாக விஷ்ணு விஞ்ஞானம் விளங்குவதோடு அவற்றின் இல்ட்சியமாகவும் விளங்குகிறது. விஷ்ணு விஞ்ஞானத்தைப் பயிலுதல் உயரிய பயிற்சியாகும். இப்பயிற்சி மற்றைய பயிற்சிகள் அனைத்திலும் உள்ள நன்மைகளை உட்கொண்டதாகும்.மேற்குறித்தகருத்துகள் அனைத்தையும் நிறுவ மாத்வர் பிரம மெய்ப் பொருளியலை விளக்குகிறார்.