பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ήσυ 4)ψινύamνηφαλιινολό வித்தல் வேதம் உணர்த்தும் உண்மைகளின் அகத்துாய் மையை அறிதலே பிரம் மெய்ப்பொருள் இயலாகும். வேதவளத்தை அறிதலால் பிரமத்தின் எல்லையற்ற முழுமையான நிறைவினை அறிதல் கூடும். அறிவும், அறிவுற்ற பிற நிலைகளும் ஒன்றோடு ஒன்று மாறுபட்டு நிற்கக் காண்கிறோம்.இம்மாறுபாடுகளை எல்லாம் கடந்த் நிலையில் உண்மையான அறிவு நிலை நிறுத்தப் பெறுகிறது.இவ்வாறு அறிவு நிலை நிறுத்த்ப் பெறுதலே வேதத்தின் வளத்தைக் குறிப்பதாகும். வேதவளத்தைவெளிப்படுத்துவதற்கு யுக்தி அல்லது அறிவு பயன்படுத்தப்படுகிறது. இவ்வறிவு வேத அறி வாகும். உலகியலிலே பயன்படும் அறிவைக் கடந்த அறிவு, வேத அறிவு. வேத அறிவினால் உணரும் உண்மைகள் பின்னர்ப் பொய்யாவது இல்லை. வேத அறிவினிடத்து முழுமையான ஆன்மீக நோக்குச் சிறப்பாக அமையக் காண்கிறோம். வேத அறிவு தன் உண்மையைத் தானே நிறுவுகிறது. ஆனால், இவ்வறிவு உலகியலில், அனுபவ நிலையில் பயன்படுகிற பொழுது முரண்படு வதைக் காண்கிறோம். பிழைபடுவதாக அமைகிறது. ஏனெனில் அனுபவ நிலையில் எவ்வுண்மையும்பேருண்மையாகாது; எதுவும் நிறைவுடையாதாகாது.