பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 த கோவேந்தன் இபபேருவகை யாவற்றையும் கடந்தது; அனுபவ நிலைகளால் கட்டுப்படாதது. பேருவகை என்பது பற்றி லாத நிலையை வெளிப்படுத்துவதாகும். பற்றின்மை என்பது, பிரமம் ஒன்றே பற்றுதற்கு உரியது என்பதை உறுதி யாகக் கொள்வதாகும். அனைத்தும் ஒன்றையொன்று தழுவியதாக உள்ளது; ஆனால் உயர்ந்த ஒன்றினை நோக்க இவையனைத்தும் குறையுடையனவே. மெய்ப்பொருள் இயல் மனிதனால் படைக்கப் பெற்றது. அன்று. மனிதனிடத்துள்ள தெய்வீகக் கூறிண்ை விளக்குவதே மெய்ப்பொருள் இயலாகும். பிரமத்தின் அருளின் விளைவாக மெய்ப்பொருளியல் அமைகிறது. அறிவின் உயரிய வாயிலை அறிதலும் அவ்வாயி லின் உயரிய பொருளாக உள்பொருளை அறிதலும் மெய்ப்பொருளியல் முறைகளாகும். பிரமம் என்ற சொல் உயர்வை உயர்ந்த அறிவு பிறப்பதற்கு உரிய வாயிலாகப் பிரமம் விளங்குகிறது.இவ்வகையில், பிரமம் இன்றியமை யாதது, என்றும் நிலைப்பது, (nitya), குற்றமற்றது, (nirdosra), தன் உண்மையைத் தானே நிறுவுவது (Svatahpramana) உருவம் அற்றது (a-pauruseya) ஆகும். இக்கருத்துக்களால் பிரமம் வேதம் என, வழங்கப் பெறுகிறது. பிர்மம் உள்பொருளாகக் கருதப்பெறின் அனைத்து நிறைவும் ஒருங்கேயுடையது என்பது புலனாகும். அனைத்து நிறைவும் உடைய ஒன்று, அனைத்து ஆற்றலையும் உடையது ஆகும். உள்ள அனைத்திற்கும் உளதாகும் தன்மையினை நல்குவது பிரமம் ஆகும். உள்பொருள் என்பது (!) தன் உண்மை நிலை (சொரூபம்) (2) அதன் புற நிலை (பிரமிதி) (3) உள்பொருளின் செயற்பாடுகள் (பிரவிர்த்தி) ஆகிய அனைத்தையும் கொடுக்கின்ற நிலையில், செய்கின்ற நிலையில் பிரமம் விஷ்ணுவென வழங்கப்பெறும். பிரம மெய்ப்பொருளியல் விஷ்ணுவின் மெய்ப் பொருளியலாக மாறுகிறது. இதனை உணராமை