பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

த. கோவேந்தன்

(7) தன்னிறைவு. உலகிலுள்ள எப்பொருளும் மேற்குறித்தத் திறன்களைப் பெற்றுள்ளன எனக் கூறுதல் இயலாது. ஆதலால், உண்மையான செயல் நிலையை, உடையதாகக் கூறுதல் இயலாது.' பிரமம் ஒன்றே மேற்குறித்த ஆற்றல்களை அனைத்தையும் ஒருங்கே உடையதாகும். எல்லாவற்றையும் நிகழ்த்து கின்ற திறனையும் உடையதாகும். பிரமம் சார்பற்றது. பிரமமே, செய்வோனாக, செயப்படும் பொருளாக விளங்குகிறது. யாவும் பிரமத்தின் செயலேயாகும். இவ்வுலக நிகழ்ச்சிகள் பிரமத்தின் படைப்பாற்றல்கொள்ளும் விரிவே. செயல் உலகு, பிரமத்தின் ஆற்றலை மறுப்ப தாகாது. பிரமம் யாவற்றையும் நிகழ்த்துவோன் என்று கருதும்பொழுது விஷ்ணுவாகக் கொள்ளப்பெறுகிறான். யாவற்றையும் நிகழ்த்துகின்றதிறன்,பொருள்களைப் படைத்தலிலும், பணியாற்றுவ்திலும் அடங்குகிறது. இவ்வுலகு, பிரமத்தினுடைய ஆற்றலின் விளைவாகும். அதாவது செயற்படுத்துவதிலும் அமைகிறது. செயற் படுவது, செய்வானாகாது. அதே போல், செயற்படு வோனும் தாமே செயற்படுவதாகக் கருதுவதற்கு இல்லை. செயற்படுத்தப்பெறுவதாகக் கருதுதல் வேண்டும். செய்பனும், செயற்படு நிலையும் முடிவாக நோக்குகிற போது ஒன்றேயாகும். ஒரு பொருள் செயற்படுகின்ற நிலையிலே தரப்பெற்றாலும், அல்லாத செயற்படுத்து கின்ற நிலையிலே தரப்பெற்றாலும்,இவ்விரு நிலைகளும் விஷ்ணுவின் படைப்பாற்றலின் வெளிப்பாடு எனவே கொள்ளுதல் வேண்டும். அனைத்தையும் நிகழ்த்த வல்லவன் விஷ்ணு என்பது வெளிப்படுகிறது. இவ்வுண் மையை வெளிப்படுத்துவதே வேதம்.

4

பிரம மெய்ப்பொருள் வேதத்தின் உண்மைப் பொருளை வரையறை செய்கிறது. சாந்தோக்கிய