பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம்

89

உபநிடதம் கூறும் 'சத்வித்தை' அல்லது 'சாற்பற்றதன் விளக்கத்தை அல்லது உண்மையினை, மாத்வர், விளக்கு வதிலிருந்து பிரம மெய்ப்பொருளே வேதத்தின் உட் பொருள் என, நன்கு விளங்குகிறது. சாந்தோக்கிய உபநிடத விளக்கம், சார்பற்றது, உள்ளது, அனைத்திற்கும் மூலம் என்ற குறிப்புகளோடு தொடங்குகிறது. இவ்வாறு விளக்குகின்ற பகுதியின் முடிவிலே காண்பது; அனைத்துப் பொருள்களுக்கும் உண்மையினை இருப்பினை நல்குவதைப் பற்றிய கருத்தே, அனைத்தும் நிறைவுள்ளது என்னும் கருத்தினைத் தருவதாகும். சார்பு அற்றது. எங்கும் நிறையும் இயல்புடையது என்பது இங்கு வற்புறுத்தப்பெறுகிறது. இவ்வுண் மையினை நாம் சிறு நிகழ்ச்சிகளை அறிதலிலும் பயன்படுத்தலாம். மிகச் சிறிய ஆலவிதை, சார்பற்றதினுடைய ஆற்றலின் விளக்கமாகும். மஹா வாக்கியமாகிய 'தத்த்வம் அசி' சார்பற்றதின் விளக்கமாக யாவும் அமைவதைக் குறிப்பதாகும். இந்த மஹா வாக்கியத்தின் உட்பொருளை ஒருவன் உணர்வதற்குமுன் அவன் தனித்த இருப்புடை யோன் என்று கருதப்படுகிறான். மஹா வாக்கியத்தின் உட்பொருளை உணர்ந்த பிறகு ஒருவன் தன் உண்மை, சார்பற்றதினின்றும் பெறப் பெற்றதாகக் கருதுகிறான். இவ்வுண்மையின் உணர்வே, விடுதலையாகும். 'உத்த லகர்' என்னும் ஆசிரியர், மேற்குறித்த மெய்ப்பொருள், உணர்வு அனைத்தையும் உள்அடக்குவது, ஆதலால், இன்றியமையாதது என்று பாராட்டுகிறார். இவ்வுண்மை யினை உணர்தலே உண்மையான ஞானமாகும். சார்பற்றது அனைத்தையும் தோற்றுவிக்கும் ஒன்றாக, இப்பகுதியில் அடங்குகின்ற குறிப்புகள் அனைத்தையும்தோற்றுவிக்கும் ஒன்றாக,இப்பகுதியில் அடங்குகின்ற குறிப்புகள் அனைத் தையும் விளக்குவதாகும். சார்பற்றது, எவ்வித தாக்கிற்கும்