பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

த. கோவேந்தன்

உட்படாதது. ஒன்பது வகையான எடுத்துக்காட்டுகளின் மூலம், சார்பற்றது எவ்வித மாற்றங்களாலும் தொடர்பு உறாதது என்பது விளக்கப்பெறுகிறது. உப்பினை எடுத்துக்கொள்வோம். உப்பு, காணப் பெறினும், காணப்பெறாது போயினும், உப்பேயாகும். இதுபோல, படைப்பு நிகழினும் நிகழாது போயினும், சார்பு அற்றது, சார்பு அற்றதேயாகும். சார்பு அற்றது இவ்வகையிலே மற்றவற்றினின்றும் நன்கு பிரித்து அறியப் பெறுகிறது. சாந்தோகியத்தில் காணப்பெறும், சத்வித்தை, அல்லது சார்பற்ற ஒன்றனின் விளக்கம் எவ்வாறு அமைகிறது என்பதைக் காணுவோம். ஒரு பகதியின் உட் பொருள் அதன் பொருளைக் காணும் முறையால் வெளிப்படும் பொருளின் தொடக்கம் முடிவு, வற்புறுத் தப்பெறுகின்ற பகுதிகள், அதன் விளைவு, மூலக் கருத்து, கொள்ளும் பொருளின் காரணம் ஆகியவற்றை ஆராய்வதால் அவ்வுட்பொருள் வெளிப்படுவதாகும். சாந்தோக்கியத்தில் காணும் மேற்குறித்த பகுதியையே, மேலும் மாத்வர் விளக்கிச் சார்பற்றதன் உயர் வான உண்மைகளைப் புலப்படுத்துகிறார். சார்பற்றது தன்னை, தன்னிடத்திருந்தே பிறப்பித்துக் கொள்கிறது. சார்பற்றது, கருதியவைகள் "யான் எல்லை கடந்த உருவத்தில் அமைவேனாக" படைத்தலாகிய செயலை மேற்கொள்வேனாக என்பனவாகும். இப்பகுதியின் கருத்திற்கு இயையவே படைப்பைப் பற்றிப் பேசும் பொழுதெல்லாம்.இருவகைப் படைப்புகளை நினைவில் வைத்துப் பேசுகிறார். அவற்றில் ஒன்று எல்லை கடந்த விஷ்ணுவின் வடிவங்கள், விஷ்ணுவினின்றே தோன்று வது. மற்றொன்று எல்லை கடந்த வடிவங்கட்கு ஏற்ப அமையும். இவ்வுலகில் அமையும் வடிவங்கள், விஷ்ணு வினின்றே தோன்றுவது. பின்னர் அமையும் படைப்புகள்,