பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பிரம்ம மெய்ப்பொளுளியலின் பயிற்சி

மாத்வர் இறைவன் கொள்ளும் இருவகை வெளிப் பாடுகள் இரண்டினைக் குறிக்கிறார். அவற்றுள் ஒன்று, சார்பு அற்றது. மற்றொன்று. சார்புடையது. சார்பற்றது, தத்துவமாகும். சார்புடையது, தத்துவம் செயல்படுவதால், விளைவதாகும். சார்புடையவன், சார்பு அற்றதின் வளத்தை விளக்குவனவாகும். சார்புடையன, உணர்வுடையன, உணர்வற்றன என்ற இருவகையையும் உள்ளடக்கியதாகும். உணர்வற்றன, மூவகையாகும். அவற்றுள் ஒன்று, இடையறாது தோற்று விக்கப்பெறுவன.எடுத்துக்காட்டு:வேதம்,இரண்டாவது, இடையறாது தோன்றுவனவும், ஒர் ஒருகால் தோன்று வனவுமாகும். எடுத்துக்காட்டு: பொருள், காலம் இடம் ஆகியவை. மூன்றாவது ஒரோது கால் தோன்றுவன; எடுத்துக்காட்டு: ஜோடி முதலியனவாகும். மனம் செயற்படும் ஒவ்வொரு செயலிலும் உணர்வுடைய ஒருவன் இடைவிடாது தோற்றுவிக்கப் பெறுகிறான். அறிவோர் அனைவரும், மெய்ப்பொருளைப் பயிலுதலையே, வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொள்ளல் வேண்டும். மனிதர் வெவ்வேறு வகையினர் ஆவர். ஒரு சாரார், மெய்ப்பொருளியலை விரும்பிப் பயிலுவோர் ஆவர். மற்றொருசாரார், அதைப் பொருட்படுத்தாது இருப்பார் ஆவர். பிறிதொரு சாரார், மெய்ப் பொருளி யலை எதிர்ப்போர் ஆவர். பிழைபடும் அறிவு, அறிவு