பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பாரதத்தில் செழித்த வைணவம்

95

ஆகாததுபோல்,பொருட்படுத்தாது இருப்போரும், எதிர்ப்போரும் உண்மையில் அறிவோர் ஆகார். பிரம மெய்ப்பொருளியல் அறிவதற்குக் கடினமானதாகும். பிரமம் மெய்ப்பொருளியலைப் பயிலுவோர், விஷ்ணுவின் அருளைக் கொண்டு பயிலலாம். இவ்வாறு பயிலுதல் மெய்ப்பொருளியல் அறிவினைப் பலவகை கட்கு உட்படுத்தும், மெய்ப்பொருள் இயலில் அறிவின் தரத்திற்கு ஏற்ப ஐவகையினர் என குறிக்கப்பெறுகின்றனர். (1) உலகினைக் கட்டுப்படுத்தி இயக்குவோர் (தேவர்); (2) ஆசிரியர்கள்; (3) தந்தை; (4) காப்போர் (5) மனிதர்கள். இவ்வாறு பிரிவுபடுத்தல், உலகினை இயக்குவோரையும் மற்றையோரையும் மெய்ப்பொருள் அறிஞர்களாகக் கருதும்படி செய்கிறது. இவர்கள் அல்லாத மற்றையோரை உலகினை இயக்குவோர் எனக் கருதுதல் பிழையாகும். மெய்ப்பொருள் அறிவிலே பலவகைகள் உண்டு எனக் கொள்வது அறிவின்மையிலே பலவகைகள் உண்டு என்பதைக் குறிப்பதாகும். திரிபுக் காட்சி, அறிவின்மையிலே, இடம் பெறுவதாகும். மனிதன் மீது செயல்நிலையைச் சுமத்திக் காணுதல், திரிபுக் காட்சிக்குக் காரணமாகும். திரிபுக் காட்சி தீமைகளுக்குக் காரணமாகிறது. பற்று, வெறுப்பு, முதலியன திரிபுக் காட்சியால் நிகழும் தீமைகளாகும். பிறப்பு, இறப்பு போன்றவை, விருப்பு, வெறுப்பு ஆகியவற்றால் விளைவனவாகும். இவை யனைத்தும் விஷ்ணுவை முதலாக உடையன. விஷ்ணு அனைத்தையும் நிகழ்த்துவோர் ஆவர். ஒவ்வொரு ஆன்மாவிலுள்ளும் இயக்குகின்ற தத்துவமாக விஷ்ணு அமைகிற எந்த ஆன்மாவும் செயலற்றோ, பொறுப்பற்றோ இருத்தல் இயலாது. ஏனெனில் செயல் நிலைகள் அனைத்திற்கும், மூலமாக விளங்குகின்ற விஷ்ணு ஒவ்வொரு ஆன்மாவினுள்ளும், செயற்படுத்துகின்ற தத்துவமாக விளங்குகிறார். தானே செய்வோன் என்ற கொண்டாலன்றி எந்த ஆன்மாவும் செயலற்று,