பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
த.கோவிந்தன்

பொறுப்பற்று இருத்தல் இயலாது என்பதை இது உணர்த்தும். பலவற்றையும் நிகழ்விப்போன் விஷ்ணு எனக் கொள்ளுதல் வேண்டும்.

ஒவ்வொருவனும் தனது உடலைத் தனக்குரியதாக்க் கொள்ளாது, விஷ்ணு செயற்படுவதற்கு உரிய வாயிலாகக் கொள்ளவேண்டும். இவ்வாறு, கொள்ளுதல் விஷ்ணுவின் பேரராற்றலை ஏற்பதாகும். விஷ்ணுவின் ஆற்றல் வெளிப்பட ஒவ்வொருவனும், தனது உடலினைக் கருவியாக அமைத்துக் கொள்வதாவது,தனது உளநிலை, பிறப்பு, சூழ்நிலை ஆகியவற்றை விஷ்ணுவின் படைப்புகளாகக் கொண்டு அவற்றிற்கு ஏற்ப செயல்படுதலாகும். வாழ்வினது உயிர்நிலை, செயலாகும். செயல்நிலை, அறிவின் விளக்கமாகும். ஒவ்வொரு ஆன்மாவும் இறைவனைச் சார்ந்திருத்தலை உணர்வது ஞானமாகும். சார்பின்றி இருத்தலை உணர்வது சார்பின் படைப்பாற்றலைப் பாராட்டுவதாகும். இப்பாராட்டே விஷ்ணுவை வழிபடுதல் ஆகும்.

பிரம மெய்ப்பொருளியலை நன்கு பயிலுதலும், பயிற்றுதலும், ஆன்மாவினைக் கட்டினின்று விடுவிக்கும். பிரம் மெய்ப்பொருளியலைப் பயிலுதல் மாறான பற்றுகள் இன்மையை உட்படுத்தும். உண்மையினை அறிதற்கு ஆவல், மெய்ப்பொருளியலைப் பயிலுதல், உண்மை அறிவினிடத்துஈடுபாடு, திரிபுக் காட்சிஇன்மை, உண்மையைப் பாராட்டுதல், மாறான நிலைகளை வெல்லுதல், அறிவு பெறுதலிலே கொள்ளும்உள நிறைவு, உலகப் பொருள்கள் நிலைத்தன அல்ல, பொருண்மை உடையன அல்ல என்பன போன்ற உண்மைகளை உணர்தல், கட்டின்றி வரையரையின்றி விளங்குகின்ற பிரமத்தை உணர்தல் முதலியன முறையே பற்றின்மையை உணர்த்தும்.

உளச் சார்புகள் ஏதும் இல்லாத ஒருவன் உண்மையினுடைய மூலம், யாது என அறிய விரும்புதல் இயல்பே. உண்மை அறிவினைப் பிறப்பிப்பது குறித்து ஐயம் நிகழ்தல் முறையேயாகும்.