பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாரதத்தில் செழித்த வைணவம்

97

ஐயமின்மை என்பது உளச் சார்பைக் குறிக்கும். உண்மையில் ஐயுறுகின்ற ஒருவன் அறிவினைச் சிறந்த முறையில் தருவதும், உயர்ந்த உண்மையைத் தருவதும் எது என ஆராய்தல் இயல்பு. இவ்வாறு உயரிய பொருளை உணர்த்துகின்ற அறிவின் வாயிலை நாடுவதே, ஆராய்வதே, மெய்ப்பொருளியலாகும். மெய்ப் பொருள் இயல் அறிவு அமைகிறபொழுது மேலே குறித்த நலன்கள் யாவும் வெளிப்படுகின்றன. நலன்கள் நன்கு வெளிப்பட்டுத் தோன்றுகிறபோது மெய்ப் பொருளியல் சிறக்க வழி அமைகின்றது.

மாத்வர் கருத்துப்படி, அற அல்லது ஆன்மீக ஒழுக்கம் பிரம மெய்ப்பொருளியல் அறிவு பெறுதற்கு இன்றியமையாததாகிறது. ஆன்மீக, அற, ஒழுக்கம் பிரமமெய்ப் பொருள் இயல் அறிவை நன்கு பெறவும் புரிந்து கொள்ளவும், பெரிதும் தேவையாகிறது. இது நன்கு தெளியப் பெறுகிறபொழுது வேதமும், வேதத்தின் பொருளும் செவ்வையாக வெளியிடப்பெறுகிறது. வேதத்தின் உட் பொருள் பிரமம் என்பது நன்றாக விளக்கிக் கூறப் பெறுகிறது. பிரமமே வேதத்தின் உட்கிடை என்பது பிரம மெய்ப்பொருளியலைப் பயிற்றலால் விளைவதாகும். வேத உண்மைக்ளை நன்கு பயிற்றல் விஷ்ணுவை திருப்தி செய்தல் ஆகும்.

வேத உண்மைகளைப் பயிலுதலும், பயிற்றுதலும் சமூகத்திற்குப் பயன்தருவனவாகும். சமூகப் புனர் அமைப்பிலே, ஒவ்வொருவரும் மெய்ப்பொருள் இயல் அறிவு பெற வேண்டும். சமூகப்புனர் அமைப்பு குறித்த மாத்வரது தலையாய கருத்துகள் வருமாறு: மெய்ப் பொருளியல் அறிவு பெறுவதற்கு உரிய உள் நிலையை அல்லது வேட்கையைப் பிறப்பினால் அறிதலைவிடத் தகுதியினால் அறிதலே பொருத்தம் எனக் கொள்கிறார்.

சமூகத்திலே கடைக்கோடிக்குத் தள்ளப்பட்ட சூத்திரர்களும், பிரம மெய்ப்பொருளியலைப் பயிலுதல் வேண்டும் என்று மாத்வர் வலியுறுத்துகிறார். தீண்டாத் தகாதவர்களும் பயிலுதல் வேண்டும் என்று மாத்வர்