பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

98

த.கோவிந்தன்

கருதுகிறார். விஷ்ணுவிடத்தில் ஈடுபாடு உடையோரே என்பதை ஒப்புக் கொள்கிறார். மனித சமூகத்தின் பொது நோக்கு விஷ்ணுவைப் பற்றி அறிதலும் ஆராய்ச்சியுமே யாகும் எனக் கருதுகிறார்.

சமூகதின் வளர்ச்சி, வீழ்ச்சி அரசியல் அமைப்பின் விளைவேயாகும். மாத்வர் அரசின் கடமையாக நல்ல சூழ்நிலையை உருவாக்குவதை விரும்புகிறார். தக்கதோர் சூழல் உருவாகுமேயானால் பிரம மெய்ப்பொருளியல் எளிதில் அமையும். எந்த எந்தக் கருத்துகள் பிரமமெய்ப் பொருளியல் அறிவதற்குத் துணை நிற்குமோ அந்தக் கருத்துகளை ஊக்கவிக்க வேண்டும் என்கிறார். குறிக்கோளுக்கு மாறான கருத்துகளை வெறுத்து ஒதுக்க வேண்டும் என்கிறார். ஆகவே அரசியல் அமைப்பு நல்ல அறிவு நிலை பெறுவதற்கு மிகவும் தேவையானதே. அறிவு முதலிலே ஒன்றன் வாயிலாகப் பெறுவதாக அமைகிறது. பிறகு பயிற்சி. மிக மிக, தெளிவு பெற்று நேராக அறிகின்ற நிலை ஏற்படுகிறது.இந்நிலை அமைகிற பொழுது அவன் பெற்ற அறிவிற்கு ஏற்பப் பிரமமெய்ப் பொருளியல் உண்மைகளை அறிந்து இன்புறுகிறான்.

இவ்வாறு, கற்று, தெளிந்து, இன்புறுதலே இவ் வாழ்க்கையில் பெறுகின்ற விடுதலையாகும். இவ்விடுதலையை ஜீவன் முக்தி என்பர். விஷ்ணுவின் அருளால் ஒருவன் விஷ்ணுவை அடைகிறான். இதுவே விடுதலை. விடுதலை யாவது விஷ்ணுவினால் பெறுகின்ற பேரின்ப நுகர்வே யாகும். அதாவது, விஷ்ணுவைப் பேரன்பிற்கு உரியதாகப் பெற்று இன்புறுதலாகும்.

புதிய அத்தியாயம்

மாத்வரது பிரம மெய்ப்பொருளியலை ஒருமைக் கொள்கையின் உயரிய வடிவமாக அறியலாம். சார்புடையவற்றைச் சார்பு அற்றவையினின்று பிரித்து அறிகின்ற நிலை, ஒருமைக் கொள்கையினை வற்புறுத்தும் உண்மையைக் குறைவறக் கூறுவதாகும். சார்பு'அற்றதை மெய்ப்பொருளியலினாலேதான், அறிதல் இயலும் என்று