16. பிரகாசம், ஓமந்தூரார்
அமைச்சரவைகள்
1939ல் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் மந்திரி சபை ராஜினாமா செய்த பின் கவர்னர் ஆட்சி நடைபெற்றது. இரண்டாம் உலகப் போரைக் காரணம் காட்டி இந்தியா முழுவதும் பொதுத் தேர்தலை நடத்தாமல் அரசு தள்ளி வைத்தது. ஏழாண்டு காலம் சென்னை மாநிலத்தில் கவர்னர் ஆட்சி நடைபெற்றது.
1946ஆம்ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை மாகாண சட்ட சபைக்குத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 163 இடங்களைக் கைப்பற்றியது. சுப்பராயன் திருச்செங்கோடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இராஜாஜிக்கு எதிர்ப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த காமராசரும், ஆந்திர காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த டி. பிரகாசமும், கேரள காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த மாதவமேனனும் ஆகிய மூவரும் இணைந்து சென்னை மாகாண முதல்வர் பெயரைப் பரிந்துரை செய்யும்படி அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியை வேண்டினர். காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைமை சென்னை மாகாண முதல்வர் பதவிக்கு இராஜாஜியின் பெயரைப் பரிந்துரை செய்தது.
இதை விரும்பாத சென்னை மாகாண காங்கிரஸ் தலைமை மாகாண காங்கிரஸ் கமிட்டியைக் கூட்டி விவாதித்தது. வாக்கெடுப்பும் நடத்தியது. இராஜாஜிக்கு ஆதரவாக ஒருவரும், எதிராக 148 பேரும் வாக்களித்தனர். மத்தியத் தலைமை முடிவை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் இன்றைய நிலை அன்று இல்லை.
பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்
92