சுப்பராயனுக்கும் அது உடன்பாடாகவே இருந்தது. இம்முயற்சிக்கு இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் சர்தார் வல்லபாய் படேலின் ஆதரவும் இருந்தது.
14.02.1947 அன்று சென்னை மாகாண சட்டசபை உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சென்னை மாகாண முதலமைச்சர் டி. பிரகாசம் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தமிழகக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. காமராசர், டி.எஸ்.எஸ். ராஜன், ஆந்திரப் பகுதி காங்கிரஸ் தலைவர் ஏ. காளீஸ்வர ராவ், மலையாளப் பகுதிக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. மாதவமேனன் போன்றோர் டி. பிரகாசம் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்தனர்.
ஓ. பி. இராமசாமி ரெட்டியாரை 110 உறுப்பினர்கள் ஆதரித்தனர். இந்த முடிவை சுப்பராயன் மூலம் டெல்லிக்கு அனுப்பி ஒப்புதல் பெற்றனர். 24.03.1947 அன்று ஓ.பி. இராமசாமி ரெட்டியார் மந்திரி சபை பதவியேற்றது.
திண்டிவனம் வட்டம், ஓமந்தூரில் முத்துராம ரெட்டியார் - அரங்கநாயகியம்மாள் ஆகியோர் மகனாக 01.02.1895ல் பிறந்தவர் ஓ.பி. இராமசாமி ரெட்டியார். 1910 ஆம் ஆண்டு சிங்காரத்தம்மாள் அவர்களை மணம் செய்து கொண்டார். மனைவி 1920ல் மறைந்த பின் வேறு திருமணம் செய்து கொள்ளாமல் பொது வாழ்க்கையில் முழுக் கவனம் செலுத்தினார். 1937ல் நிறவெறி கொண்ட தென்ஆப்பிரிக்க அரசு அனுப்பிய கிராம்பு ஏற்றிய கப்பல் சரக்கை இறக்காமல் தொழிலாளர்கள் பகிஷ்கரித்த போராட்டத்தை முன்னின்று நடத்திச் செல்வாக்குப் பெற்றார். சிறந்த காந்தியவாதியான இராமசாமி ரெட்டியார் ரமணமகரிஷி, வள்ளலார் மீது பக்தி கொண்டு துறவிபோல் வாழ்ந்து நெய்வேலிச் சுரங்கத்திலிருந்து வடலூருக்கு விலக்குப் பெற்றார். சுத்த சன்மார்க்க சங்கம் நிறுவி 1950 முதல் வடலூரிலேயே வாழ்ந்தார். தம் வடலூர் நிறுவனங்களை சக்தி நிறுவனங்களின் தலைவர் அமரர் அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் அவர்கள் வசம் ஒப்படைத்தார். அவை தொடர்ந்து சிறப்பாக இயங்கி வருகின்றன.
பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்
94