உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நியமிக்கப்பட்டவர்களில் சிலர் பரம்பரைப் பாளையக்காரர் பட்டக்காரர்களாகவும், பலர் குறிப்பிட்ட பகுதிகட்கு வரிவசூல் செய்யும் உரிமையுடைய புது ஜமீன்தாரர்களாகவும் இருந்தனர். 1802 வாக்கில் இம்முறை ஏற்படுத்தப்பட்டது.

பல ஜமீன்தார்கள் கம்பெனி நிர்ணயம் செய்த வரியை விட அதிகமாக வரியை விவசாயிகளிடமிருந்து கசக்கிப் பிழிந்து வசூல் செய்தனர். விவசாயிகள் அதனால் பெரும் தொல்லைக்கு ஆளாயினர். கம்யூனிஸ்ட் கட்சியினரும், ஆந்திரப் பகுதியில் டி. பிரகாசம் தலைமையிலும் ஜமீன்தார்களுக்கு எதிர்ப்பு வலுத்தது.

சில இடங்களில் கம்பெனி அரசு நேரிடையாக மணியகாரர், கணக்கர் மூலம் வரிவசூல் செய்யும் ரயத்வாரி நிலங்களுக்கும், ஜமீன்தார்கள் வரிவசூல் செய்யும் நிலத்திற்கும் வரியில் அதிக வேறுபாடு இருந்தது. எடுத்துக்காட்டாக வாகைக் குளத்தில் ரயத்வாரி பாசன நிலங்கட்கு 9 ரூபாய் முதல் 22½ ரூபாய் வரை வரி இருக்க அதே அளவுடைய ஜமீன் நிலங்கட்கு 65 ரூபாய் முதல் 75 ரூபாய் வரை வரிவசூல் செய்யப்பட்டது.

கம்யூனிஸ்ட் கட்சியினர் ஜமீன்தார்கள் வசூல் செய்யும் அதிக வரியைப் பட்டியலிட்டனர். அதில் குமரமங்கலம் ஜமீன் பெயர் இல்லை. குமரமங்கலம் ஜமீனில் உரிய வரியே வாங்கப்பட்டது என்பது தெரிகிறது. விவசாயிகளின் துயர் துடைக்க ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம் கொண்டு வருவதை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டது.

1937-39ல் இராஜாஜி அமைச்சரவையில் சென்னை மாகாண சட்ட அமைச்சராக சுப்பராயன் இருந்தபோது ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டத்திற்கான மசோதாவைச் சட்ட சபையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவைச் சட்டமாக்க டி. பிரகாசம் தலைமையில் செலக்ட் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த செலக்ட் கமிட்டி சென்னை மாகாணம் முழுவதும் பயணம் செய்து செய்திகள் சேகரித்து ஒரு அறிக்கையை 1938ல் அரசுக்குக் கொடுத்தது. இரண்டாம் உலகப் போரின் காரணமாக நாடு முழுவதும் காங்கிரஸ் அமைச்சரவை ராஜினாமா


பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்

98