நீதியிலே பற்றுடையான் திராவி டத்தின்
நிலைமையிலே கருத்துடையான் தோழ ரேநாம்
பாதியிலே அவன்செயலை அளக்க வேண்டா
பயனுண்டு சுப்பராயன் தலைமை யாலே
மீதியுள்ள நாள்களிலே சுப்ப ராயன்
மிகுதிறமை திராவிடர்க்கே நன்மை யாகும்”
என்பன பாரதிதாசன் கவிதைகள் ஆகும்.
முதலமைச்சர் பதவிக்குப் போட்டி
சென்னை மாகாண முதலமைச்சரை ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்; அல்லது உறுதி செய்யப்பட்ட வேண்டும் என்ற கொள்கைப்படி 1949 ஏப்ரல் மாதம் முதலமைச்சர் தேர்வு நடைபெறுவதாக இருந்தது.
24.03.1947 அன்று முதலமைச்சர் பதவியேற்ற ஓ.பி. இராமசாமி ரெட்டியார் 26.03.1948 அன்று மீண்டும் இரண்டாவது முறையாக முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார். பலர் வற்புறுத்தியும் சுப்பராயன் அப்போது போட்டியிடவில்லை.
01.04.1949 அன்று சென்னை மாகாண முதலமைச்சர் தேர்வு நடைபெற்றது. ஓ.பி. இராமசாமி ரெட்டியார் போட்டியிட விரும்பவில்லை. 30.04.1946 அன்று பதவியேற்ற டி. பிரகாசம் அமைச்சரவையில் விவசாயம், வர்த்தகம், தொலைத்தொடர்பு அமைச்சராகப் பணியாற்றிய இராஜபாளையம் பி.எஸ். குமாரசாமி ராஜா முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிட்டார். டாக்டர் சுப்பராயன் அவர்களும் அப்பதவிக்குப் போட்டியிட்டார். பி.எஸ். குமாரசாமி ராஜாவிற்கு 105 வாக்குகளும், டாக்டர் சுப்பராயன் அவர்கட்கு 89 வாக்குகளும் கிடைத்தன. சுப்பராயன் வெற்றி வாய்ப்பை இழந்தார். வெற்றிபெற்ற பி.எஸ். குமாரசாமி ராஜா 06.04.1949 அன்று முதலமைச்சர் பதவி ஏற்று 09.04.1952 வரை பதவியில் இருந்தார்.
பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்
103