- 2. பீட்டர்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் மைதானம்.
- 3. முன்பு கறுப்பர் தோட்டம் என்று அழைக்கப்பட்ட தேனாம் பேட்டை காங்கிரஸ் மைதானம்
ஆகியவற்றின் பொறுப்பாளர்களாக இருந்தவர்கள் இறந்தும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை.
இவை அனைத்தும் தனியார் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு காங்கிரஸ் கட்சியின் உடமையாக்கப்பட்டு அதை நிருவகிக்க டிரஸ்டிகள் நியமிக்கப்பட்டு விதிகள், சட்ட திட்டங்கள் டாக்டர் சுப்பராயனால் முறையாக வகுக்கப்பட்டன.
காமராசர், இராமநாத் கோயங்கா (எக்ஸ்பிரஸ்), கே. சீனிவாச அய்யங்கர் மூவரும் காங்கிரஸ் சொத்துக்களின் டிரஸ்டிகளாக நியமிக்கப்பட்டனர். இது சுப்பராயன் செய்த சட்டப்பூர்வமான சிறப்புமிக்க செயலாகும்.
இதற்கிடையில் தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள் தேர்தல் வந்தது. இராஜாஜி - காமராசர் கருத்து வேறுபாடுகள் அதிகம் ஆயிற்று. இந்நிகழ்வும், பொதுத் தேர்தல் தோல்வியும் காங்கிரஸ்காரர்களிடையே சோர்வை ஏற்படுத்தியது.
தொடக்க காலத்திலிருந்து இராஜாஜி பற்றாளராக இருந்த சுப்பராயன் தன்னை மாநிலக் கட்சித் தலைவராக நியமித்த காமராசருடன் சேர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்தார். சுப்பராயனின் அன்பான அணுகுமுறை கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதனால்,
1952 பொதுத் தேர்தலில் மதுரையில் பெரும் தோல்வியைச் சந்தித்த காங்கிரஸ் நகராட்சித் தேர்தலில் பெரும் வெற்றி கண்டது.
சென்னையில் உள்ள 60 இடங்களில் காங்கிரஸ் கட்சி 33 இடங்களையும், காங்கிரஸ் ஆதரவு சுயேச்சைகள் 10 இடங்களையும் பிடித்தனர்.
பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்
115