இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மாநிலங்கள் அவை உறுப்பினராகச் சிறந்து விளங்கிய சுப்பராயன் இந்து வாரிசுதாரர் மசோதா, பல்கலைக்கழக மானியக் குழு மசோதா, ரெயில்வே பட்ஜெட், பொது வரவு செலவு மசோதா, நாடாளுமன்ற நிகழ்ச்சிப் புத்தகம் வெளியீடு மசோதா, மாகாணங்கள் சீரமைப்பு மசோதா போன்றவை மீது ஆற்றிய உரைகள் எல்லோரையும் கவர்ந்தன.
மாநிலங்கள் அவை நிகழ்ச்சிகளை ஆய்வு செய்து நூல் வெளியிட்ட டாக்டர் பவானிசிங் என்பவர் ஆக்கப்பூர்வமான மிகச்சிறந்த உரையாற்றியவர்கள் பட்டியலில் முதலாவதாக டாக்டர். பி.ஆர். அம்பேத்காரையும், இரண்டாவதாக சுப்பராயன் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியுள்ள பிறர் ஏ. இராமசாமி முதலியார், வி.கே. கிருஷ்ணமேனன், புபேஷ்குப்தா, பி. சுந்தரய்யா முதலியோர் ஆவர்.
✽✽✽
பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்
122