22. ஆளுநர் பதவியும் அமர வாழ்வும்
1962 பொதுத் தேர்தலில் சுப்பராயன் திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டார். எதிர்த்துத் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்ட செ. கந்தப்பனைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். வாக்குகள் வித்தியாசம் 12 ஆயிரம்.
புதிய அமைச்சரவையில் சுப்பராயனையும் சேர்த்துக் கொள்ள நேரு விரும்பினார். ஆனால் 1960ல் இராதாபாய் அவர்களை இழந்த சுப்பராயன் அமைச்சர் பொறுப்பை 1962ல் ஏற்கும் நிலையில் இல்லை. நேரு கொடுத்த வாய்ப்பை சுப்பராயன் மறுத்து விட்டார்.
நீண்ட நெடிய அரசியல் அனுபவம் கொண்ட சுப்பராயன் அவர்களை இந்தியாவின் பெரிய மாநிலங்களில் ஒன்றும், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகிய மகாராஷ்டிர மாநிலத்தின் இரண்டாவது கவர்னர் ஆக்க நேரு விரும்பினார். நேருவின் வற்புறுத்தலுக்கிணங்க சுப்பராயன் அப்பதவியை ஏற்றுக் கொள்ள இசைந்தார். அம்மாநிலத்தின் முதல் கவர்னர் ஸ்ரீபிரகாசா ஆவார்.
1818ல் பம்பாயைக் கைப்பற்றிய ஆங்கிலேயர் அதனைக் குஜராத்தோடு இணைத்து பெரிய பம்பாய் மாநிலம் என்று அழைத்தனர். மொழி அடிப்படையில் 1960ல் மாநிலங்கள் பிரிக்கப்பட்டு குஜராத்தும், மகாராஷ்டிரமும் தனித்தனி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன. சுப்பராயன் மகாராஷ்டிர மாநில ஆளுநராக 04.04.1962ல் பதவிப் பொறுப்பேற்றார். டெல்லி தமிழ்ச்சங்கம் நடத்திய தமிழ்ப் புத்தாண்டு விழாவில் கலந்து கொண்டார்.
பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்
126