உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“மலேயாவிலிருந்து இந்தோனேஷியா செல்ல விரும்பினேன்; அப்பொழுது இந்தோனேஷியாவில் நமது அரசாங்கப் பிரதிநிதியாகப் பணியாற்றியவர் டாக்டர் சுப்பராயன். அவர் பலமுறை அன்புடன் கடிதம் எழுதுவார். அத்தனையும் “தமிழில்” (பக்கம் 252).

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அமைக்க முதலாவது அமைச்சர் சுப்பராயன் உதவும்போது அதைத் ‘தமிழ்ப் பல்கலைக் கழகம்’ என்றே குறிப்பிட்டுள்ளார்.

சுப்பராயன் மாநிலக் கல்லூரியில் பயிலும் போது அவருக்குத் தமிழாசிரியராக விளங்கியவர் டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் அவர்கள். அவருக்கு மாநிலக் கல்லூரி வளாகத்தில் சிலை அமைக்கச் சுப்பராயன் விரும்பினார்.

சிலை அமைக்கத் தக்க ஏற்பாடுகளைச் செய்து 06.05.1948 அன்று நடைபெற்ற சிலை திறப்பு விழாவிலும் கலந்து கொண்டு தமிழ்த்தாத்தா அவர்களின் தமிழ்ப் பணிகளைப் பாராட்டியதுடன் தாம் மாணவராக இருந்தபோது நடைபெற்ற நிகழ்வுகளையும் நினைவு கூர்ந்தார்.

08.09.1928 அன்று சென்னை மாகாண முதலாவது அமைச்சரும் கல்வியமைச்சரும் ஆகிய சுப்பராயன் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக மசோதாவைத் தாக்கல் செய்து சட்டசபையில் பேசும் போது,

இந்த மசோதாவில் தமிழ் மொழிக்கும் பிற ஒரியண்டல் மொழிகளுக்கும் தனிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நமது தமிழ்மொழியின் உயர்வைப் பற்றியும், பழமையைப் பற்றியும், கலாச்சாரத்தைப் பற்றியும் நாம் பேசிக் கொண்டிருந்தாலும் அதன் தன்மைகளையும், செறிவையும் யாரும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. வளர்க்கவுமில்லை.

மதுரையில் இருந்த தமிழ்ச்சங்கம் மட்டுமே அந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தது. தமிழின் உண்மையான அழகும், செழிப்பும்


பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்

141