மரியாதையும், சமத்துவமும் பக்தர்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காகவே சிவன் அர்த்தநாரீசுவரர் உருவானார். இப்புதுமையான விளக்கம் சிறப்புக்குரியது.
தமிழ்நாட்டுப் புராணக் கதைகளில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்க்கை ஒழுக்கம் வற்புறுத்தப்பட்டிருக்கிறது. நளன் தமயந்தி, சத்தியவான் சாவித்திரி வரலாறு கிராமப்புறக் கதையாகவும், கூத்தாகவும் பொதுமக்களுக்குப் போதிக்கப்பட்டு வருகிறது.
இரண்டாவது மனைவியைத் தேடிப் போன சிலப்பதிகாரக் கோவலன் கொலையுண்டு போன கதையைக் கூறி ஆண்கள் ஒழுக்கத்தில் ஏற்படும் தடுமாற்றத்தால் ஏற்படும் விபரீதம் விளக்கப்பட் டிருக்கிறது. திருவள்ளுவர் திருக்குறளும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்க நெறியை வலியுறுத்துகிறது” என்பது இராதாபாயின் உரைப் பகுதியாகும்.
பிராமணக் குடும்பத்தில் பிறந்து காதல் - கலப்புமணம் செய்து கொண்டு மேனாட்டுக் கல்வி கற்று சிறந்த குடும்பத் தலைவியாக விளங்கி மக்களை அறிவார்ந்த மக்களாக்கி ஆணுக்குப் பெண் சரிசமமாக வாழ்ந்து பல துறைகளில் முதல் - முதன்மைப் பெண்ணாக விளங்கி பெண் குலத்தின் ஒளி விளக்காகத் திகழ்ந்த இராதாபாய் 1960 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காலமானார்.
✽✽✽
பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்
151