சேர்ந்து கொண்டன. இந்நாடுகளை எதிர்த்து பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் போரிட்டன. இந்தியப் படைகளையும் பிரிட்டன் போருக்கு அனுப்பியது. மேஜர் பரமசிவம் பிரபாகர் குமாரமங்கலம் எகிப்துப் பகுதிக்கு அனுப்பப்பட்டார்.
பாலைவனப் பகுதியில் நாஜிப் படைகளை எதிர்க்கும் வடபகுதி ரெஜிமெண்டின் தலைமைக் கமாண்டராக மேஜர் பரமசிவம் பிரபாகர் குமாரமங்கலம் நியமிக்கப்பட்டு இவரது படைக்கு “7ஆவது ஃபீல்டு பேட்டிரி RIA” என்று பெயரிடப்பட்டது.
1942 மே 26 அன்று எதிரிப்படை போருக்கு ஆயத்தம் ஆனது. எதிரி விமானப் படை ஆயுதங்களையும், வீரர்களையும் கொண்டு வந்து இறக்கியது. 80 டாங்கிகளையும் 600 வாகனங்களையும் தயார் நிலையில் எதிரிகள் வைத்திருந்தனர். Gazala Bir Hachaim பகுதியில் இரு படைகளும் எதிர் எதிர் நின்றன.
பி.பி. குமாரமங்கலத்திற்கு ஒதுக்கப்பட்ட மூன்றாவது பிரிகேடில் ஒரு டாங்கி கூட இல்லை. பீரங்கிகளைத் தாக்கும் இரண்டு கன்கள் மட்டும் இருந்தன. இவை இரண்டும் தொலைதூரம் சென்று தாக்கும் வலிமையற்றவை. எதிரிகளிடம் PANZER என்ற வலிமை மிக்க டாங்கிகள் பல இருந்தன. அவைகளை தாக்கித் தகர்க்க மிக அருகில் சென்றால் தான் முடியும்.
பி.பி. குமாரமங்கலத்திடம் 25 பவுண்ட்ரி துப்பாக்கிகளைக் கொண்ட ஒரு சிறு ரெஜிமெண்ட் மட்டுமே இருந்தது. வீரர்களும் இதற்கு முன் போர்க்களத்தில் பணியாற்றிப் பயிற்சி இல்லாதவர்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையில் எந்த நாட்டுப் படையும் உயிர்களைக் காத்துக் கொள்ள சரணடைய விரும்பும். இவ்வளவு தடைகள் இருந்தும் எதிரிகளைக் களத்தில் சந்திப்பது என்று பி.பி. குமாரமங்கலம் முடிவு செய்தார்.
பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்
153