உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“கடைசி புல்லட் இருக்கும் வரை சுட்டுத் தள்ளுவோம். கடைசி வீரர் இருக்கும் வரை போராடுவோம்” என்று வீரர்களை நோக்கி அறைகூவல் விடுத்தார்.

அணி அணியாக வந்த டாங்கிகள் பல நம் வீரர்களால் நொறுக்கப்பட்டன. பல பலத்த சேதத்துடன் பின் வாங்கின. வீரர்கள் எண்ணிக்கை, நவீன ஆயுதங்கள் குறைவு பற்றிக் கவலை கொள்ளாமல் உள்ளத் துணிவு ஒன்றை மட்டும் துணையாகக் கொண்டு பெரும்படை முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தினார். ஏ பிரிவுப்படை 20 டாங்கிகளை அழித்தது. நாயக் ஜெகநாதன் 8 டாங்கிகளை அழித்தார். துப்பாக்கிப் படையினர் இருவர் 12 டாங்கிகளை தீக்கிரையாக்கினர்.

தன் வீரர்கள் பலியாவதைக் கண்ட மேஜர் பி.பி. குமாரமங்கலம் கண்கள் சிவந்தன. உயிரைத் துச்சமென மதித்து எதிரிகளை டாங்கு அருகே சென்று சுட்டார். இரண்டு டாங்கிகள் அழிந்தன. முகாமிற்குத் திரும்பிச் சென்ற டாங்கி ஒன்றை ஓடிச் சென்று தடுத்துத் தகர்த்தார்.

பி.பி. குமாரமங்கலத்திடம் குண்டுகள் தீர்ந்தன. இந்தச் சந்தர்ப்பத்தில் மேஜர் பி.பி. குமாரமங்கலத்தை நோக்கி நாஜி படைக் கேப்டன் இருமுறை சுட்டான். நல்லவேளையாகக் குண்டு தவறியது. “சரணடைந்து விடு” என்று நாஜி படைக் கேப்டன் கத்தினான். குமாரமங்கலம் கம்பீரமாக அஞ்சாமல் நின்று கொண்டிருந்தார். குமாரமங்கலத்தின் கம்பீரம் கண்டு நாஜிப் படைத் தலைவர் வியப்படைந்தான். குமாரமங்கலத்தைக் கைது செய்து இத்தாலியில் ஓரிடத்தில் சிறை வைத்தனர். இந்த வீர தீர சாகசம் நிகழ்த்தியபோது குமாரமங்கலத்திற்கு வயது 29.

மீண்டும் போர்க்களம் செல்ல சிறையிலிருந்து தப்பி மீண்டும் பரமசிவம் பிரபாகர் குமாரமங்கலம் கைதானார்.

28.08.1942 அன்று இங்கிலாந்தின் மக்களவையில் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் குமாரமங்கலத்தைப் பாராட்டி “அவர் வீரத்தை


பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்

154