உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30. ஜெயவந்த் கோபால் குமாரமங்கலம்

ஜெயவந்த் கோபால் குமாரமங்கலம்
ஜெயவந்த் கோபால் குமாரமங்கலம்

சுப்பராயனும், இராதாபாயும் லண்டனில் படித்துக் கொண்டிருந்தபோது முதல் மகன் பிரசவத்திற்காக இராதாபாய் 1913 ஆம் ஆண்டு மங்களூர் தாய் வீட்டுக்கு வந்தார். முதல் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தமையால் இராதாபாய் இரண்டாவது பிரசவத்திற்கு இந்தியா வர அனுமதி கிடைக்கவில்லை.

எனவே இரண்டாவது ஆண் குழந்தை லண்டனிலேயே 11.05.1915 அன்று பிறந்தது. ஜெயவந்த் கோபால் என்று பெயரிட்டனர். அவர் ஜெயவந்த் கோபால் குமாரமங்கலம் என்று அழைக்கப்பட்டார்.

உலக யுத்தம் முடிந்து 1918 ஆம் ஆண்டு பெற்றோருடன் தாயகம் திரும்பிய ஜெயவந்த் கோபால் சென்னை சாந்தோம் செயின்ட் தாமஸ் கான்வென்ட்டில் உள்ள செயின்ட் ரபீல்ஸ் ஆங்கிலப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். சென்னை சர்ச் பார்க் கான்வென்ட்டிலும் படித்தார். பின்னர் மூத்த சகோதரர் பரமசிவம் பிரபாகரன் போலவே இங்கிலாந்தில் உள்ள “செயின்ட் ஹூக்ஸ்” (St. Hugh's) பள்ளியில் 1925 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டார். பின்னர் ஈடன் (Eton) பள்ளியில் 1928 ல் கல்வியைத் தொடர்ந்தார்.


பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்

158