சுப்பராயன் அவர்கட்கு 1941 ஆம் ஆண்டு மதுரை ஆதினகர்த்தர்
திருஞானசம்பந்த தேசிகர் அவர்கள் எழுதிய கவிதைநிருபம்
பூந்தவிசில் இனிதுறைதல் போன்று தெய்வப்
பூமகளும் நாமகளும் பொருந்தி வாழும்
மாந்தரெலாம் புகழ்வளஞ்சால் எழில்குமார
மங்கலச் சமீந்தாராம் மாண்பு மிக்க
சாந்தகுண கெம்பீர சுப்ப ராயத்
தளபதியே நின்னிருபம் தனைக்கண் ணுற்றோம்
ஏந்தல்நினது அன்பினுக்கு மகிழ்ந்தோம் நீஇவ்
இருநிலத்தில் நீடூழி இனிது வாழி!
நின்னிடம்யாம் புகலுவதொன்று உளதுஅச் செய்தி
நிகழ்த்திடுவோம் இந்துமத நிலையைக் காக்க
என்னவந்த ஒருசட்டம் பயிரைக் காத்தற்கு
இயற்றியதோர் வேலிபயி ரினைமேய்ந் தாற்போல்
அன்னமதம் தன்னையழிக் கின்றது ; ஈண்டை
அதற்கொருவி மோசனம்காங் கிரசின் ஆட்சி
தன்னிலுங்கண் டோமில்லை நீயே இந்தத்
தருமபரி பாலனத்தைத் தழைக்கச் செய்யே!
ஆய்ந்தவர்பல் லோருமிகப் புகழும் இந்த
அரசியல்நல் துறையினில்முன் னிலும்ஆ திக்கம்
வாய்ந்துபதின் மடங்குசீர் சிறப்பும் எய்தி
மாண்புமிகும் நமதுஇந்து மததர் மத்தை
ஏய்ந்தபுகழ் அரசேநீ காக்க வேண்டி
எங்கள்சுந்த ரேச்வரனை இறைஞ்சு கின்றோம்.
சேந்தனுயர் குருபூசை அருட்பிர சாதம்
சேர்ப்பிக்தோம் பெற்றணிந்து சிறந்து வாழி !
விஷு வருடம்
வைகாசி மாதம் 30 தேதி
திருஞானசம்பந்த தேசிகர்
பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்
201