உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“அங்கோட்டு அகல்அல்கும் ஆயிழையாள் நம்மோடு
செங்கோடு பாய்துமே என்றாள்மற்று - அங்கோட்டின்
மேற்காணம் இன்மையால் மேவாது ஒழிந்தாளே
காற்கால்நோய் காட்டிக் கலுழ்ந்து”

என்ற நாலடியார் பாடலில் குறிக்கப் பெறும் “செங்கோடு” இம்மலையே என்பர்.

சிலப்பதிகாரத்தில்,

“குன்றக் குறவர்”

“வென்வேலான் குன்று”

“நெடுவேள் குன்றம்”

“சீர்கெழு செந்திலும் செங்கோடும்”

என வரும் இடங்களில் எல்லாம் “கொங்கு நாட்டுத் திருச்செங்கோடு” என்றே அடியார்க்கு நல்லாருக்கு முன்பு அருஞ்சொற்களுக்குப் பொருள் எழுதியமையால் “அரும்பத உரையாசிரியர்” என்று பெயர் பெற்றவர் கூறுகிறார்.

திருச்செங்கோட்டில் பாவடி மைதானத்தில் உள்ள கல்வெட்டு “முருகப் பெருமான் திருப்படை வீடாகிய திருச்செங்கோடு” என்று கூறுகிறது. பல இலக்கியங்கள் திருச்செங்கோட்டை “ஏரகம்” என்றே குறிக்கின்றன.

“ஏரக நாயக ஆடுக செங்கீரை”

என்பது செங்கோட்டு வேலவர் பிள்ளைத் தமிழ்த் தொடர்.

“ஏரகத்தார் படித்தரத்துக்கு ஈந்த தாமே”

என்பது ஒரு தனிப்பாடல் தொடராகும். கொங்கு நாட்டுப் பெரும் புலவர் வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் முருகப் பெருமானின் படை வீடாக நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் கூறும் “ஏரகம்” சோழநாட்டுச்


பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்

10