உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“சுவாமிமலை” அல்ல. கொங்கு நாட்டுத் திருச்செங்கோடே என்று ஆய்ந்து எழுதியுள்ளார்.

கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் தமிழகம் எங்கும் யாத்திரை மேற்கொண்டு தன் சந்தக் கவியால் முருகப் பெருமானைப் பாடிப் பரவிய அருணகிரிநாதர் இத்தல முருகப் பெருமான் மீது 21 திருப்புகழ்ப் பாடல்கள் பாடியிருப்பது மிகவும் சிறப்புக்குரியது.

“செஞ்சாலிமிஞ்சி மஞ்சாடு கின்ற
செங்கோ டமர்ந்த பெருமாளே”

“திதிக்கும் பார்வதியின் மதிப்புண் டாக்கிய
திருச்செங் கோடுறை பெருமாளே”

“கொண்டல் ஆர்த்துச் சிறக்கும் காட்சிக்
கொங்கு நாட்டுத் திருச்செங்கோட்டுப் பெருமாளே”

என்றெல்லாம் பாடிப் பரவியுள்ளார்.

திருவண்ணாமலையில் கோபுர வாயில் வடவருகே முருகப்பெருமான் காட்சி தந்த போது பாடியதாகக் கருதப் பெறும் கந்தரலங்காரத்தில் பல இடங்களில் திருச்செங்கோட்டு வேலவரைப் பாடி மகிழ்ந்துள்ளார். அவை மிகச் சிறந்த பாடல்களாகும்.

“தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செழுஞ்சுடரே”

“வழிக்குத் துணைவடி வேலும் செங்கோடன் மயூரமுமே”

“சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனை”

“சேலார் வயற்பொழில் செங்கோ டனைச்சென்று கண்டுதொழ
நாலா யிரங்கண் படைத்தில னேஅந்த நான்முகனே”

என்பன அருணகிரிநாதர் பாடிய கந்தரலங்காரத் தொடர்கள்.

கந்தர் அனுபூதியிலும் அருணகிரி நாதர்

“நாகாசல வேலவ நாலுகவித்

தியாகா சுரலோக சிகாமணியே”


பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்

11