3. தூரன் குலம்
நூற்றுக்கு மேற்பட்ட கொங்கு வேளாளர் குலங்களில் இலக்கியம், கல்வெட்டு, செப்பேடு முதலிய அனைத்திலும் சிறப்புடன் குறிக்கப் பெறும் சில குலங்களில் தூரன் குலமும் ஒன்று. தூரன் குலம் பேச்சு வழக்கில் தூரகுலம் என்றும் அழைக்கப்பெறும். குலம் - கூட்டம், கோத்திரம் எனவும் கூறப்படுவதுண்டு. தூரை குலம் என்றும் சில இடங்களில் குறிக்கப் பெறுகிறது. ப. சுப்பராயன் குடும்பம் தூரன் குலம் சார்ந்தது.
வடக்கே வேளாளர் வாழ்ந்ததாகக் கருதப்படும் ‘துவரன்பதி’ என்ற ஊர் ஒன்று இருந்ததாகக் கூறப்படுகிறது. இலக்கிய வழக்கில் “துவரன்” என்பது “துவரை” என்றும் கூறப்படும். புறநானூற்றுப் பாடல் ஒன்றில் (200) புலவர் கபிலர் இருங்கோவேள் என்னும் குறுநில மன்னரை,
“உவரா ஈகைத் துவரை ஆண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே”
என்று அழைத்துள்ளார். கருநாடக மாநிலத்துக் கோலார்ப் பகுதியில் “துவரை நாடு” என்ற பகுதியும், “துவாரசமுத்திரம்” என்ற ஊரும் உண்டு. இப்பெயர்களால் தூரன் குலம் பெயர் பெற்றிருக்கலாம் என்ற கருத்து தூரன் குலத் தமிழ் அறிஞர் ம.ப. பெரியசாமித் தூரன் அவர்கட்கு உண்டு.
கண்ணன் வாழ்ந்த “துவாரகாபுரி”யில் கூட வேளிர் (வேளாளர்) வாழ்ந்துள்ளனர். தொல்காப்பிய உரையாசிரியர் நச்சினார்க்கினியர் “அகத்தியர் தென்திசைக்கண் போதுகின்றவர் துவாராபதி போந்து
பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்
16