நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசு பதினெண்மரையும் பதினெண்குடி வேளிர் உள்ளிட்டாரையும் அருவாளரையும் கொண்டு போந்து காடு கெடுத்து நாடாக்கினார்” என்று கூறுகிறார். அவர்கள் கொங்கு வேளாளர் தூரன் குலத்தாரின் முன்னோரா என்பது ஆய்வுக்குரியது. தென்னிலைச் செப்பேடுகள் இரண்டில் ஒன்றில் மட்டும் தூரன்குலம் துவரை குலம் என்று அழைக்கப்படுகிறது.
சிலர் தூரன் குலத்தைத் துவரைச் செடியோடு (கொடி) தொடர்புபடுத்தி துவரைச் செடி தூரன் குலத்தாரின் அடையாளச் சின்னம் என்று கூறுகின்றனர். ஒரு கொங்கு ஆய்வாளர் “தூர தேசத்திலிருந்து அவர்கள் வந்த காரணத்தால் தூரன் குலம் என்று பெயர் பெற்றார்கள்” என்று கூறுகிறார். தூரன் குலம் மிகத் தொன்மையான ஆவணச் சான்றையும் பெற்றுள்ளது. மாந்தரஞ்சேரல் என்ற சேர மன்னன் பாண்டியனோடு போர் தொடுக்க ஆயத்தமாகும்போது தன் கீழ் உள்ள ஆறு சிற்றரசர்கட்குச் சிறப்புச் செய்யுமாறு தன் அமைச்சர் “தூரர்” என்பவரைக் கேட்டுக் கொண்டதாக மாந்தரஞ்சேரல் மெய்க்கீர்த்தி கூறுகிறது.
“தூதுவரைப் போக்கிவரும் தூரர்என்னும் மந்திரரை
ஏதுவுடன் மிகப்பார்த்து எழுந்தவரோடு அமர்புரிய
தனக்குபகா ரம்புரிய தலையளிசெய் அறுவரையும்
மனக்கினிய முறைமையதில் மகிழ்விக்கு மாறியம்பி”
என்பது அம்மெய்க்கீர்த்திப் பகுதியாகும்.
தூரன் குலத்தார் பல இடங்களில் ஊர், நாடுகளின் நிர்வாகியாக இருந்துள்ளனர். “குவலயத் தினில்அரசு புரிகின்ற தூரகுலர்” என்பது ஒரு பாடல் வரியாகும். தனிப்பாடல், இலக்கியங்களில் “சாந்தம் மிளிரும் தூரர்” “சீர்கொண்ட தூரர்” “உத்தம குணாநிபுண தூரர்” என்று தூரன் குலத்தார் புகழப்பட்டுள்ளனர்.
கம்பர் பாடிய முதலாவது கொங்கு குலப் பாடல் என்று ஒரு பாடலைக் கொங்குக் காணியான பட்டயம் கூறுகிறது. அப்பாடல் பகுதி,
பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்
17