இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5. குமரமங்கலம் முதன்மை
தூரன் குலத்தாருக்கு 20க்கும் மேற்பட்ட பழமையான ஊர்கள் காணியுரிமையுடைய ஊராக இருப்பினும் அவற்றில் குமரமங்கலம் தான் முதன்மை ஊராக இருந்துள்ளது. கொங்கு நாட்டுத் தூரன் குலத்தார் ஒன்றாகக் கூடும் இடம் குமரமங்கலம் என்பது ஒரு செப்பேட்டால் உறுதிப்படுகிறது.
குமரமங்கலம் தூர குலத்தார்,
“நாடு புகழ் குமரமங்கை மேவும் தூரர்”
“நீதிக் குமரபுரித் தூரர்”
என்று இலக்கியத்தில் புகழப்பட்டுள்ளனர்.
கி.பி. 1622 ஆம் ஆண்டு தமிழ் துந்துபி வருடம் வைகாசி மாதம் 6 ஆம் நாள் கொங்குநாட்டுத் தூர குலத்தார் பலர் குமரமங்கலம் குலதெய்வக் கோயிலான பொன்காளியம்மன் கோயிலில் கூடினர். அவர்கள்,
பட்டிலூர் - நல்லியகவுண்டர் சீராப்பள்ளி - காளிகவுண்டர் பாலமேடு - பிடாரகவுண்டர் முடுதுறை - செங்கோட கவுண்டர் கல்யாணி - வேல கவுண்டர் தும்பங்குறிச்சி - நல்லிக்கவுண்டர் கீரம்பூர் - எட்டுக்கைக் கவுண்டர் கோதையூர் - காளி கவுண்டர் இடையாறை - ராசாக் கவுண்டர்
பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்
24