மூன்றாவது மனைவி நாச்சம்மாள் பார்வதி என்ற பெண் குழந்தைக்குத் தாயானார். சில நாளில் நாச்சம்மாள் காலமானார். பார்வதி குழந்தைப் பருவத்திலேயே காலமானார். பெரிய பரமசிவக் கவுண்டரும் 1898ல் காலமாகிவிடவே பாப்பாயம்மாள் ஜமீனின் ஒரே வாரிசான சுப்பராயனைக் கண்ணின் மணியாய்ப் பாதுகாத்தார்.
தந்தை இறந்த போது சுப்பராயன் மைனராக இருந்ததால் அக்கால அரசு விதிப்படி ஜமீனை அரசு மேற்கொண்டு சுப்பராயனைச் சென்னைக்கு அழைத்துச் சென்று தங்கள் பொறுப்பில் வைத்துக் கல்வி கற்பிக்கத் தக்க ஏற்பாடுகள் செய்தனர்.
பெரிய பரமசிவக் கவுண்டரின் மரணம் பற்றியும், சுப்பராயனின் வாழ்க்கை குறித்தும் 1934-ஆம் வருடம் திருச்செங்கோடு தி.அ.முத்துசாமிக்கோனார் பின்வருமாறு “கொங்கு நாடு” நூலில் எழுதியுள்ளார். “சுப்பராயக் கவுண்டன் என்பவர் திருச்செங்கோட்டில் நந்தா தீபமும் தளிகை நைவேதனமாதிகளும் செய்வித்தனன். இவன் மகன் பரமசிவக் கவுண்டன் ஸ்ரீஅர்த்தநாரீசுவரர் பிரம்மோத்சவத்தில் ஒரு மண்டபக் கட்டளையும் விடாயாற்று உற்சவமும் செய்வித்தனன். இவர்கள் பூர்வீகக் குடும்பம் பிரிக்கும்போது முத்தாஞ்செட்டி என்னும் மிட்டாவை பாண்டீசர் பூசை முதலிய தர்மத்துக்கு தர்மசாசனம் செய்யப்பட்டுள்ளது. திடீரென்று இவருக்கு அகால மரணம் நேர்ந்தது. இதுபற்றி யாவரும் வருந்தினர் என்றாலும் இது இவருடைய இளமையான ஏக புத்திரன் சுப்பராயனின் நல்லதிர்ஸ்டத்தின் முளையாகவுமாயிற்று.
உடனே சர்க்காரில் அவர்களின் பொருள்களைக் காவல் செய்தனர். சர்க்கார் தரப்பில் கோர்ட் ஆப் வார்ட்சில் சென்னையில் வைத்துக் கொண்டார்கள். பிள்ளை மைனர் (சுப்பராயன்) படிப்பு விஷயத்தில் மெத்த அக்கறை செலுத்தினார்கள். வாசித்துத் தேறியவுடன் விவாகத்திற்குப் பிரயத்தனப்பட்டார்கள். அங்கே தன் மனதிற்கு ஒத்த ஸ்ரீமதி ராதாபாய் என்னும் பிராமண மாதினை பிரம சமாஜக்-
பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்
34