வந்தார். கல்லூரி சார்பாகக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார். பல்கலைக்கழகத்தில் 1916 ஆம் ஆண்டு பார்அட்லா பட்டம் பெற்றதும் தாயகம் திரும்ப விரும்பினர். முதல் உலகப் போரின் காரணமாக இங்கிலாந்தை விட்டுப் புறப்பட அனுமதி கிடைக்கவில்லை.
லண்டனில் 11.05.1915 அன்று ஜெயவந்த் கோபாலும் 01.11.1916இல் சுரேந்திர மோகனும் பிறந்தனர்.
சுப்பராயன் அயர்லாந்தில் உள்ள டப்ளின் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.டி என்ற சட்ட மேல்படிப்புப் படிக்கச் சேர்ந்தார். 1918ல் எல்.எல்.டி. (சட்டத்தில் டாக்டர் பட்டம்) பட்டம் பெற்று இங்கிலாந்து திரும்பினார். அயர்லாந்தில் படிக்கும் போது அந்நாட்டு அரசியல் நிகழ்வுகளை அறிவதில் நாட்டம் கொண்டார்.
முதல் உலக யுத்தம் முடிவுக்கு வந்ததும் 1918ல் சுப்பராயனும், இராதாபாயும் தாயகம் திரும்பினர்.
இராதாபாய்க்கு 15.03.1919 அன்று ஊட்டியில் பார்வதி பிறந்தார். சுப்பராயன் தாயகம் திரும்பிய பின் 1919 ஆம் ஆண்டு தாயார் பாப்பாயம்மாள் காலமானார். லண்டன் சென்று படித்து வந்ததால் சுப்பராயன் அவர்களை மக்கள் “சீமைத்துரை” என்று அன்புடன் அழைத்தனர்.
✽✽✽
பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்
40