பிரம்ம சமாஜம்
சென்னை வந்த சுப்பராயனின் சமத்துவ நோக்கத்திற்கு சாதி, மத, இன வேறுபாடு பார்க்காது மனிதத்தைப் போற்றுகின்ற “பிரம்ம சமாஜம்” கொள்கை பிடித்ததால் அதில் உறுப்பினர் ஆனார். இராதாபாய் அவர்களின் தந்தை கே.எஸ். ரங்கராவ் பிரம்ம சமாஜத்தின் முக்கியத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரம்ம சமாஜ நிகழ்விற்குச் சென்னை வந்த கே.எஸ். ரங்கராவை சுப்பராயன் சந்தித்தார்.
சென்னை இந்து மகாசபை
தாயகம் திரும்பியதும் சேலம் நீதி மன்றத்திலும், சென்னை உயர்நீதி மன்றத்திலும் வழக்குரைஞராகப் பதிவு செய்து கொண்ட சுப்பராயன் வழக்கின் பொருட்டுச் சென்னை செல்ல வேண்டியிருந்தது. அப்போது மவுண்ட் ரோட்டில் இருந்த இந்து மகாசபைக்குச் சுப்பராயன் செல்வது வழக்கம். அங்கு நடைபெற்ற தேச விடுதலை பற்றிய விவாதங்களில் சுப்பராயன் பங்கேற்றார்.
குடும்ப நண்பரும், சக வழக்கறிஞருமாகிய இராஜாஜியால் சுப்பராயன் காங்கிரஸ் இயக்கத்தில் 1919-ல் உறுப்பினர் ஆனார்.
அமிர்தசரஸ் காங்கிரஸ் மாநாடு
1919 டிசம்பரில் அமிர்தசரசில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்குச் சுப்பராயனுக்கு அழைப்பு வந்தது. முதன் முதலில் ஒரு அரசியல் கட்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பைச் சுப்பராயன் பெற்றார். இம்மாநாட்டில் இராஜாஜியும், சேலம் விஜயராகவாச்சாரியாரும் பெரும்பங்கு வகித்தனர். சுப்பராயன் சென்னை மாகாணக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும், சட்டமன்றத் தேர்தலில் கலந்துகொள்வது பற்றித் தீர்மானிக்கும் குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவைகளே சுப்பராயன் வகிக்க நேர்ந்த முதல் அரசியல் பதவிகளாகும்.
பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்
43