ஆவேசமாகப் பேசினார். “அநாகரிகமான தாக்குதல்” என அவர் பேச்சைக் கண்டித்தார்.
“ஒருவர் தனது தாய்நாட்டின் விடுதலைக்காக ஒரு இயக்கத்தில் சேர்ந்து தனது சுகங்களைத் துறந்து கைதாகும்போது அவர்களை இவ்வாறு தாழ்மைப்படுத்தி இழிவாகப் பேசுவது மனித நாகரிகமற்றது. இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
எதிர்காலத்தில் நானும் எனது மனச்சாட்சியின்படி இதுபோன்ற போராட்டங்களில் கலந்து கொள்ளலாம். இதுபோன்ற விமர்சனம் செய்தால் எனது மனம் எவ்வளவு வேதனைப்படும்” என்று பேசினார்.
1923 ஆம் ஆண்டு நடைபெற்ற 12 செனட் உறுப்பினர்கள் தேர்தலில் சென்னைப் பல்கலைக்கழக செனட் உறுப்பினர்களாக டாக்டர் சுப்பராயனும், இராதாபாயும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் செனட் மூலம் சிண்டிகேட் உறுப்பினராகவும் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கணவரும், மனைவியும் செனட், சிண்டிகேட்களில் ஒன்றாக இருந்தது சிறப்புக்குரியது.
விசுவாசமான கட்சிப் பற்றாளர்களும், உழைப்பாளர்களும் ஆன கே.வி. ரெட்டி, ஓ. தணிகாசலம் செட்டியார் போன்றவர்களை அமைச்சர் ஆக்காமல் ஓய்வு பெற்ற மாவட்ட உதவி ஆட்சியரை (டி.என். சிவஞானம்) அமைச்சராக்கியது சரியல்ல என்று சுப்பராயன் அவையில் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சுப்பராயன் நிதிக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கானாடு காத்தானில் மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்க சுப்பராயன் 23.4.1924 இல் உதவி செய்தார்.
சட்டசபையில் நீர்ப்பாசன மசோதா, நிலவரித் தீர்மானம் ஆகியவற்றின் மீது நடைபெற்ற விவாதங்களில் எல்லோரும் பாராட்டும் வண்ணம் பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தார்.
பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்
49